ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நாகு, பரமு செய்த சூழ்ச்சியால் வந்த புதிய சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

நாகு, பரமு செய்த சூழ்ச்சியால் வந்த புதிய சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

நாகு, பரமு செய்த சூழ்ச்சியால் வந்த புதிய சிக்கல் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் நாகு, பரமு சின்னாவுக்கு பரிமாறும் போது சாம்பாரில் உப்பு போட அவர்கள் பிரச்சனை பண்ணுகின்றனர்.

  சமையல்காரரை வர வைக்க அவர் இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் நீ மட்டும் என்ன என சொல்லி சண்டையிட பரமு சின்னா கோபப்பட்டு பேச இதனால் சமையல்காரர் வெளிநடப்பு செய்கிறார்.

  மதிய சமையலுக்கு ஆள் இல்லையே என அமுதா கலங்க செந்தில் அம்மாவும் மாமாவும் அட இது ஒரு வேலையா என சொல்லி களம் இறங்குகின்றனர். அமுதா தடுக்க முயல இத யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் என அன்னம் சொல்கிறாள்.

  சாப்பாடு பிரமாதமாக இருப்பதாக சொல்லி சிதம்பரம் சமையல்காரருக்கு பாராட்டுகளை சொல்ல, அமுதா அன்னலட்சுமி சமையல் செய்ததை சொல்ல சிதம்பரம் மனம் நெகிழ்கிறார்.

  Also read... Naane Varuven review: செல்வராகவன் - தனுஷ் - யுவன் கூட்டணியின் தவறவிடக்கூடாத மற்றொரு படம் - நானே வருவேன்

  இப்படிப்பட்ட ஒருவரது வீட்டிற்கு தனது மகள் மருமகளாக போகிறாள் என பெருமையாக பேச நாகு கடுப்பாகிறாள். அடுத்து சிதம்பரம் உமா, அமுதாவை ஆசிர்வாதம் செய்து, நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்.  நீங்க ரெண்டு பேரும் வேற வீட்டுக்கு போக போறீங்க, போற வீட்டுல நல்ல பெயர் எடுக்க வேண்டும் என வாழ்த்துகிறார். இருவரும் கண்கள் கலங்குகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

  இதனைத் தொடர்ந்து கல்யாணத்தில் நடக்கப் போகும் பிரச்சனைகள் என்ன? செந்தில், அமுதா சந்திக்க போகும் சவால்கள் என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv