ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குஸ்தி போட்டியில் பழனியை வெளுத்து வாங்கும் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

குஸ்தி போட்டியில் பழனியை வெளுத்து வாங்கும் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

குஸ்தி போட்டியில் பழனியை வெளுத்து வாங்கும் செந்தில், முதல் மரியாதை யாருக்கு? அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். கோவிலில் மரியாதை யாருக்கு என்பதை முடிவு செய்ய மல்லு கட்ட மைதானம் தயாராகிறது. அமுதா செந்திலிடம் தனியாக பேசுகிறாள். இதைப் பார்த்து பயந்துட்டா என்கிறான் வடிவேலு.

    உன் அண்ணன் எப்படிடா என பழனி கேட்க நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா குஸ்தி கத்துகிட்டோம் என்கிறான் வடிவேலு. குஸ்தி ஆரம்பிக்க போகும் சமயம் வடிவேலு தான் அண்ணனுடன் சண்டையிட போவதாக சொல்கிறான்.

    சகலைகளுக்கு நடுவுல கெளரவ பிரச்சனையாயிட போகுது என சொன்னவன் சிதம்பரத்தை நக்கலாக பார்க்கிறான். அமுதாவிடம் உன் ஆளு என்ன ஆக போறான் பாரு என சொல்ல அமுதா டென்ஷனாகிறாள்.

    அடுத்து குஸ்தி போட்டி நடக்கிறது. செந்தில் பழனியை வெளுத்து வாங்க அமுதா பெருமிதம் கொள்ள, உமா கடுப்பாகிறாள். உங்க சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்காது என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறாள்.

    போட்டியில் வெற்றி பெற்ற செந்திலுக்கு வாள் கொடுக்கப்படுகிறது. இதனால் பழனி குடும்பம் கோபமடைய சிதம்பரம், அமுதா ஆகியோர் சந்தோஷமடைகின்றனர்.

    Also read... ஐஸ்வர்யாராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க கூச்சமாக இருந்தது - நடிகர் சரத்குமார்

    அடுத்து செந்திலின் காயங்களுக்கு அம்மா மருந்து போட்டுக் கொண்டிருக்க அங்கு அமுதா வர ஆளாளுக்கு எஸ்கேப் ஆகிறார்கள். பின்னால் இருந்து அமுதா மருந்திட அது அமுதா தான் என தெரியாமல் அவன் அமுதா பற்றி ரசித்து பேச அமுதா சிரிக்கிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv