ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செந்தில் வாத்தியார் இல்லை என கண்டுபிடித்த ஞானசம்பந்தம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செந்தில் வாத்தியார் இல்லை என கண்டுபிடித்த ஞானசம்பந்தம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

செந்தில் வாத்தியார் இல்லை என கண்டுபிடித்த ஞானசம்பந்தம், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் பேராசிரியர் ஞானசம்பந்தம் செந்திலிடம் ஒருவரது பேச்சை வைத்தே அவர்கள் உண்மை பேசுகிறார்களா, பொய் பேசுகிறார்களா என தான் கண்டுபிடித்து விடுவேன், நீ வாத்தியார் இல்ல தான என கேக்க, செந்தில் சமாளிக்கிறான்.

    பிறகு அமுதா செந்திலிடம் எப்படி பொய் சொல்லி கல்யாணம் செய்து கொள்வது சரி என வாதிடலாம் என கோபப்படுகிறாள். அடுத்து பழனி தனது ஆட்களுடன் சென்று துரையை அடித்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் தூக்கி போடுகிறான்.

    அடுத்ததாக கோவிலுக்கு அனைவரும் சாமி கும்பிட வந்திருக்க வடிவேலு சிதம்பரத்திடம் வம்பிழுப்பது போல பேச அவர் மாப்பிள்ளை தம்பி நீ அந்த மரியாதைய காப்பாத்திக்க என சொல்கிறார். அங்கு வரும் பரமும் சின்னாவும் அவனை ஏற்றி விடுகின்றனர். பின்னர் பூஜை முடிந்து வாள் எடுத்து யாருக்கு தருவது என பேச்சு வருகிறது.

    மூத்த மாப்பிள்ளைக்கு கொடுங்க என சிதம்பரம் சொல்ல செந்திலின் கையில் வாளை தரப்போகும் சமயம் பூசாரி மாப்பிள்ளைங்க ரெண்டு பேர் இருக்காங்கல்ல மல்லுகட்டி யார் ஜெயிக்கிறாகளோ அவங்க வாங்கிகட்டும் என்கிறார். சிதம்பரம் அதெல்லாம் வேணாங்க என சொல்ல சித்தப்பா அட நம்ம புள்ளைங்க வீரம் என்ன என்பதை பள்ளத்தூர்காரங்க தெரிஞ்சுக்கட்டும் என்கிறார். இதனால் செந்திலும், பழனியும் குஸ்திக்கு தயாராகின்றனர்.

    Also read... தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா!

    இந்த போட்டியில் ஜெயிக்க போவது யார்? அடுத்து நடக்கப் போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv