Home /News /entertainment /

செந்தில் ஓவியம் வரைய போன இடத்துக்கு வந்து அதிர்ச்சி கொடுத்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செந்தில் ஓவியம் வரைய போன இடத்துக்கு வந்து அதிர்ச்சி கொடுத்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

செந்தில் ஓவியம் வரைய போன இடத்துக்கு வந்து அதிர்ச்சி கொடுத்த அமுதா, அடுத்து நடந்தது என்ன அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் அமுதா விஷயத்தை அன்னலட்சுமியிடமும், மாணிக்கத்திடமும் சொல்லி அழுவ அன்னம் அவளை அழைத்துக் கொண்டு கிளம்புகிறாள்.

    செந்தில் வரைந்து கொண்டிருக்க காரில் அமுதாவும், அன்னலட்சுமியும் போக பின்னால் மாணிக்கம் பைக்கில் வந்தவர் விஷயத்தை சொல்ல செந்திலுக்கு போன் செய்து அவனை அலர்ட் பண்ண முயல அவன் போன் அடிப்பதை கவனிக்காமல் வேலையை தொடர்கிறான்.

    பிறகு செந்தில் இருவரையும் பார்த்து ஷாக்காகிறான். ஏன் இப்படி செய்தாய் என அன்னலட்சுமி கேக்க, செந்தில் தான் வாத்தியார் இல்லை என்கிற உண்மை தெரிந்து விட்டதாக டென்ஷன் ஆக அவள் ஓவியம் வரைந்தது பற்றி பேச செந்தில் நிம்மதி அடைகிறான்.

    பின்னர் ஓவியம் வரைந்து முடித்து வீட்டிற்கு வந்த பின் அமுதா செந்திலை தனியே அழைத்து பேசுகிறாள்‌. ஏன் என்னிடம் இந்த மாதிரி பணப் பிரச்சனை என சொல்லியிருக்கலாமே என வருந்துகிறாள். அவன் ஆசிரியர் வேலையை பார்த்துக் கொண்டே இப்படி ஓவியமும் வரைவது குறித்து பெருமையாக பேசுகிறான். நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உங்கள பத்திரமா பார்த்துப்பேன் என சொல்லி செந்திலின் தோளில் சாய்ந்து கொள்கிறான். செந்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்கிறான்.

    உமாவின் காதலன் பங்ஷன் நடக்கும் போது வீட்டிற்கு வர உமா டென்ஷன் ஆகிறாள்‌ அதை அமுதா கவனிக்க உமா துரையை எதற்காக இங்கு வந்தாய் என சண்டையிட்டு துரத்த அவன் நான் உன்னை சும்மா விட மாட்டேன் என சொல்லிவிட்டு செல்ல அமுதா அதைப் பார்த்து விடுகிறாள்.

    Also read... பப்லி பவுன்சர் பட விழாவில் நடிகை தமன்னா - நியூ கிளிக்ஸ்!

    மேலும் அமுதா உமாவிடம் காரணம் கேட்க, உமா நடந்தவற்றை சொல்ல அவனால் திருமணத்தில் குழப்பம் வருமோ என அமுதா அச்சம் கொள்கிறாள்‌‌. பிறகு அமுதா உமா விஷயத்தை செந்திலிடம் சொல்கிறாள்.  இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? செந்தில் என்ன செய்யப் போகிறான்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி