முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமுதாவிடம் வசமாக சிக்கிய செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவிடம் வசமாக சிக்கிய செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

உமாவின் தோழியால் வீட்டில் வெடித்த பிரச்சனை, அமுதாவிடம் வசமாக சிக்கிய செந்தில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். செந்திலுக்கு ஓவியம் வரைய சொல்லி ஆர்டர் வர லட்ச ரூபாய் தருவதாக சொல்ல, அவன் செல்ல மறுக்கிறார். வாத்தியார் இன்றைக்குள் தராவிட்டால் சிதம்பரத்திடம் தான் இப்போதே உண்மையை சொல்ல போவதாக சொல்ல செந்தில் வேறு வழியின்றி அன்று இரவே யாருக்கும் தெரியாமல் ஓவியம் வரைய வருவதாக ஒத்துக் கொள்கிறான்.

மேலும் மாமா டென்ஷனாக வேறு வழியில்லை மாமா காச குடுத்து இவன நம்ம தலை முழுகுவோம் என சொல்கிறான். பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெறும் போது செந்திலுக்கு ஒரு போன் வருவது. அவன் எல்லாரையும் பார்த்து விட்டு அங்கிருந்து நகர முயல, பின்னால் வந்த அமுதா அவனை கூப்பிட, அவன் தனக்கு தலைவலிப்பதாக சொல்ல, அமுதா அவனை ஒரு ரூமில் படுக்க வைக்கிறாள்.

பிறகு செந்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஓவியம் வரைய கிளம்ப மாமா கல்யாணத்தை வைத்துக் கொண்டு இப்போது போக வேண்டாம் என மீண்டும் சொல்ல, செந்தில் நான் இல்லாததை எப்படியாவது சமாளிங்க மாமா என சொல்லி அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே போகிறான்.

ரோட்டில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் செந்திலை உமாவின் தோழி பார்த்து, விஷயத்தை சொல்வதற்காக உமாவுக்காக போன் அடிக்க, அமுதா போனை எடுக்க உமா பேசுவதாக நினைத்து செந்தில் பெயிண்டிங் வேலை பார்ப்பதாகவும், உங்கள் எல்லாரையும் ஏமாற்றி விட்டான் என சொல்கிறான்.

Also read... தனுஷ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

அமுதா குழப்பத்துடன் ரூமில் சென்று பார்க்க, அங்கு செந்தில் இல்லாமல் இருக்க அமுதா அன்னலட்சுமியிடம் உங்க பையன் நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டான் என சொல்ல, அன்னலட்சுமி அதிர்ச்சி அடைகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன செந்தில் இதை எப்படி சமாளிக்க போகிறான் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv