Home /News /entertainment /

பழனிக்கும் செந்திலுக்கும் நடக்கும் போட்டி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

பழனிக்கும் செந்திலுக்கும் நடக்கும் போட்டி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

பழனிக்கும் செந்திலுக்கும் நடக்கும் போட்டி, ஜெயிக்க போவது யாரு அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். அமுதா விளக்கேற்ற அவர் புடவை பற்றி எரியும் என நாகுவும் அவளது அம்மா கோமதி சிவப்பு பாஸ்பரத்தை புடவையில் தடவிய நிலையில் அமுதாவுக்கு எதுவும் ஆகாததால் இருவரும் குழம்ப பிறகு இருவரையும் அன்னம் எச்சரித்தாள்.

    இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ப்ளாஷ் பேக்கில் அன்னலட்சுமி, நாகுவும் கோமதியும் ஏதோ சதித் திட்டம் தீட்டுகிறார்கள் என சந்தேகப்பட்டு, அமுதாவின் புடவையை பார்க்க, அதில் ஏதோ தடவி இருப்பதை கண்டுபிடித்து, அதை தண்ணீரால் துடைக்கிறாள்.

    பரமுவும் சின்னாவும் கண்ணன் செய்த செயலை சொல்லி நாகு அம்மா கோமதியை அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் நாகு எரிச்சலடைகிறாள். ஆடுங்கடா ஆடுங்க உங்கள வச்சே இந்த கல்யாணத்த நான் நிறுத்தி காட்டுறேன் என சபதம் எடுக்கிறாள்.

    Also read... பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது - மணிரத்னம் விளக்கம்!

    அடுத்ததாக மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற , மாப்பிள்ளைகள் இருவரும் சேர்ந்து அவரவர் மணப்பெண்ணிற்கு மருதாணி வைக்க மருதாணி யாருக்கு அதிகமாக சிவக்கிறதோ அவர்களே நல்ல தம்பதிகளாக இருப்பார்கள் என சொல்ல, நாகுவும் கோமதியும் அமுதாவிற்கு இடப்படும் மருதாணியை மாற்றி வைக்க பிளான் செய்கின்றனர். இதனால் நடக்க போவது என்ன? இத போட்டியில் ஜெயிக்கப் போவது பழனியா? செந்திலா? நாகுவின் திட்டம் பலிக்குமா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி