Home /News /entertainment /

அமுதாவின் புடவையை பற்ற வைக்க நாகு, கோமதி போட்ட திட்டம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவின் புடவையை பற்ற வைக்க நாகு, கோமதி போட்ட திட்டம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவின் புடவையை பற்ற வைக்க நாகு, கோமதி போட்ட திட்டம், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். கண்ணன் போட்ட டிராமா மொத்தமாக சிதம்பரத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவனை பெல்ட்டால் வெளுத்த சிதம்பரம் செந்திலை பெருமையாக பேசுகிறார். ‌இந்த நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டில் நலங்கு ஏற்பாடு நடைபெறுகிறது. அன்னலட்சுமியின் தோழியாக நாட்டுப்புற பாடகி சின்னப் பொண்ணு வருகிறார். நலங்கு பாடல் பாடி ஆரம்பிக்கின்றனர்.

    நாகுவும் கோமதியும் ஏதாவது செய்ய வேண்டுமென திட்டம் தீட்ட பிறகு அமுதாவின் புடவையில் ரெட் பாஸ்பரசை தடவுகின்றனர். அமுதா விளக்கேற்றும் போது புடவை பற்றிக் கொள்ளட்டடும் என திட்டம் போடுகின்றனர்.

    பிறகு அமுதா புடவையை அணிந்து வந்து விளக்கேற்றப் போகிறாள். அமுதாவின் புடவை பற்றி விடும் என நாகுவும் கோமதியும் எதிர்ப்பார்ப்புடன் இருக்க, அமுதா புடவை பற்றாமல் இருக்க இருவரும் குழம்பி தனியே பேசிக் கொண்டிருக்க, அன்னலட்சுமி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வர, நாகு,கோமதி அதிர்ச்சி அடைகின்றனர். அவர்களிடம் நான் இருக்கும் வரை அமுதாவை ஒன்றும் செய்ய முடியாது என எச்சரித்து விட்டு செல்கிறாள்.

    Also read... பலவீனத்தை மறைத்த கமலின் மறதி ஒரு தேசிய வியாதி வசனம்

    நாகுவும் கோமதியும் அன்னத்திற்கு எப்படி தெரிந்ததது என யோசிக்கின்றனர். இதனையடுத்து நடக்க போவது என்ன? இவர்களின் அடுத்த திட்டம் என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி