Home /News /entertainment /

பணத்துக்காக அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

பணத்துக்காக அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

பணத்துக்காக அமுதா எடுத்த முடிவு, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். திருமணத்திற்காக பணத்தை ஏற்பாடு செய்ய அமுதா தவித்துக் கொண்டிருக்கிறாள்‌.

    இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஆடிட்டர் இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது என சொன்னதால் அமுதா அம்மா நகைகளை போட்டோ முன்னால் வைத்து கும்பிட்டு அடகு வைத்து பணத்தை கொண்டுவர திட்டம் போடுகிறாள்.

    பிறகு அமுதா நகையை அடகு வைத்து பணம் வாங்க நகைகடைக்காரர் அந்த விஷயத்தை  பழனிக்கு சொல்ல அவன் வடிவேலிடம் சொல்கிறான். இந்த விஷயத்தை வைத்து வடிவேலு சிதம்பரத்தை அவமானப்படுத்த முடிவு செய்கிறான்.

    Also read... பிகினியில் நடிகை அனன்யா பாண்டே - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

    இதற்காக வடிவேலு இன்கம்டாக்ஸ் ஆபிஸில் இருக்கும் அவனது நண்பன் மூலமாக சொல்லி சிதம்பரத்தை கைது செய்ய சொல்ல  வீட்டுக்கு வரும் வருமானத்துறை அதிகாரிகள் அப்பாவை கைது செய்ய போக, அமுதா அவர்களிடம் அவருக்கு அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல கூடாது என கெஞ்சுகிறாள்‌.

    அண்ணன் தான் இதற்கு காரணம் என சொல்ல, அவரை எங்கே என கேட்க, அவர் வெளியில் சென்று இருப்பதாக சொல்லுகிறாள். இதனால் அதிகாரிகள் உங்கள் அப்பாவை கைது செய்வதை தவிர வேற வழியே இல்லை என சொல்ல அமுதா அதிர்ச்சி அடைகிறாள். அமுதா இதை எப்படி எதிர்கொள்ள போகிறாள்? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி