Home /News /entertainment /

செந்திலை பார்க்க போன உமாவிற்கு காத்திருந்த ட்விஸ்ட் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

செந்திலை பார்க்க போன உமாவிற்கு காத்திருந்த ட்விஸ்ட் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

செந்திலை பார்க்க போன உமாவிற்கு கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். நேற்றைய எபிசோடில் செந்திலுடன் படம் பார்க்க போயிருந்த அமுதா உமா கண்ணில் படாமல் தப்பித்தார். இதனையடுத்து பூஜாவுடன் ஜோசியம் பார்க்க போக அந்த ஜோசியக்கார பெண் உனக்கு வர மாப்பிள்ளை வாத்தியார் இல்லை என சொல்ல அமுதா அதிர்ச்சி அடைந்தாள்.

    இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் பூஜா அந்த ஜோசியக்காரியை டூபாக்கூர் என சொல்லி அமுதாவுக்கு ஆறுதல் சொல்லி அவளை தேற்ற முயற்சி செய்கிறாள்.

    அதன் பிறகு உமாவிற்கு செந்தில் வாத்தியார் தானா என சந்தேகம் எழுந்த நிலையில் நாகு சொன்னதையும் நம்பாமல் ஸ்கூலுக்கு சென்று செந்தில் பற்றி விசாரிக்க முடிவு செய்கிறாள்.

    இதனால் அவள் ஸ்கூலுக்கு கிளம்பி செல்ல அங்கு செந்தில் tea can உடன் பள்ளிக்கு வந்து கொண்டிருக்க, உமா வருகிறாள். செந்தில் கடைசி நிமிடத்தில் அவளை பார்த்து எஸ்கேப்பாகி பிளாக்மெயிலரிடம் உதவி கேட்கிறான்.

    Also read... அதிக பாலிவுட் வாய்ப்புகளை பெறும் இளம் தமிழ் இசையமைப்பாளர்!

    முதலில் அவன் அலுத்துக் கொள்ள பிறகு செந்திலுக்காக பேச ஒப்புக் கொள்கிறார். உமா பிளாக் மெயிலரிடம் விசாரிக்க செந்தில் பாடம் எடுப்பதை பார்த்து ஏமாற்றமாக நகர்கிறாள்.

    பின்னர் பிளாக் மெயிலர் மொத்தமாக அனைத்தையும் செந்திலிடம் பேச அதை உமா கேட்டு விடுகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? செந்தில் வாத்தியார் இல்லை என்ற உண்மை உமாவுக்கு தெரிய வந்ததா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி