Home /News /entertainment /

சிதம்பரத்தை அவமானப்படுத்த நாகு செய்யும் வேலை - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

சிதம்பரத்தை அவமானப்படுத்த நாகு செய்யும் வேலை - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

மாமனார் சிதம்பரத்தை அவமானப்படுத்த நாகு செய்யும் வேலை, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். செந்தில் அமுதா திருமணத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது. கடைசியாக செந்தில் மதுரைக்குச் சென்று தாலி செயின் வாங்குவதற்காக சம்பாதித்து வந்து பணத்தை வடிவேலு திருடினான்.

    இந்த நிலையில் இன்றைய எபிசோடில் செந்தில் தாலி செயினை அமுதாவிடம் காட்ட அமுதா சந்தோஷம் அடைகிறாள். அப்போது அமுதாவுக்கு சமையல் காண்ட்ராக்டரிடம் இருந்து போன் வர அமுதா அவரிடம் எதையோ பேசி சமாளிக்கிறாள். செந்திலுக்கும் இந்த விஷயம் தெரியாமல் சமாளிக்கிறாள்.

    பிறகு அப்பா சிதம்பரம் கல்யாண அட்வான்ஸ் வாங்க ஆட்கள் வருவார்கள் கொடுத்திரு என அண்ணனிடம் சொல்லிவிட்டு செல்ல நாகு குடுக்க போறீகளா என கேட்க பணம் இல்லையே என கூறுகிறான் இளங்கோ.

    அடுத்ததாக அமுதா 1000, 500 என ஆட்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க உனக்கு இருக்குடி ஆப்பு எப்படி இந்த ஆட்களுக்கு பணம் தர போற என நாகு மனதில் கருகுகிறாள். அமுதா அம்மா போட்டோ முன்னால் நின்று அம்மா இந்த பணப்பிரச்சனை கல்யாண நாளுக்கு முன்னால தீரனும் என வேண்டிக் கொள்கிறாள்.

    அமுதா அம்மாவை கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது பூக்காரன் அட்வான்ஸ் வாங்க வந்திருக்கேன் என குரல் கேட்க அவள் நான் ஒண்ணும் வர சொல்லயே என சொல்லி திரும்ப கையில் பூவுடன் செந்தில் நிற்கிறான். பூ அம்மா குடுத்தாங்க அதான் கொண்டு வந்தேன் என்று கூறுகிறான்.

    Also read... மாரியை அசிங்கப்படுத்திய தாரா... பளாரென அறைந்த ஜெகதீஷ் - மாரி சீரியல் அப்டேட்!

    பிறகு தலையில் பூ வைக்க விட போகும் சமயம் அப்பா வருகிறார். பிறகு அவருக்கு மருந்து தர அவர் பாசமாக செந்திலிடம் அமுதா ஆசப்பட்ட மாதிரி அவள பார்த்துக்கோ என சொல்ல அவர்களின் நெருக்கம் பார்த்து அமுதா மகிழ்ச்சி அடைய செந்தில் குற்ற உணர்வில் தவிக்கிறான்.

    உமாவை காதலன் பார்க்க அண்ணி நாகு அவளிடம் நீ அவனையே ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கோ என சொல்கிறாள். மாமனார் சிதம்பரத்தை அவமானப்படுத்த இது தான் சரியான வழி என யோசிக்கிறாள். அடுத்து என்ன நடக்கப்போகிறது? அமுதா பண பிரச்சனையை எப்படி தீர்க்கப் போகிறார்? நாகுவின் திட்டம் பலிக்குமா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி