ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புது வேலைக்கு போன செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

புது வேலைக்கு போன செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

முதாவும் அன்னலட்சுமியும்

முதாவும் அன்னலட்சுமியும்

புது வேலைக்கு போன செந்தில், அமுதா கொடுத்த அதிர்ச்சி, நடந்தது என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் சின்னா பரமுவிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது பற்றியும் அமுதா சீர்சனம் எதுவும் எடுத்து வரவில்லை, இங்க வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கா என  பேசுகின்றனர்.

  பின்னர் கோவிலில் சிதம்பரம் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, பரமுவும் சின்னாவும் வந்து அவரிடம் சீர் தர வக்கில்லாம தான் பொண்ணை வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாரு என நக்கலாக பேச சிதம்பரத்திடம் இளங்கோ உமாவுக்கு சீர் தரும் போது, அமுதாவுக்கும் குடுப்பது தானே நியாயம் என வாதிடுகிறான்.

  அடுத்து இளங்கோ செந்தில் வீட்டிற்கு வந்து சீர் கொடுக்க அமுதா இதெல்லாம் வேண்டாம் என மறுக்க, இளங்கோ அண்ணனுக்காக இதை வாங்கிக் கொள்ள கூடாதா என உணர்ச்சி பெருக்குடன் பார்த்தவன் அஞ்சறைப் பெட்டியை குடுத்து இதையாவது வாங்கிக்கொள் என சொல்ல அமுதா அதை வாங்கி பார்க்க உள்ளே பணம் இருக்கிறது.

  பணத்தை இளங்கோவிடம் திருப்பி குடுத்து விட்டு, இது என் வீட்டு பிரச்சனை தானே பார்த்துக் கொள்வதாக கூறுகிறாள். சின்னா அமுதாவிடம் வீட்டுக்கு வந்த லட்சுமியை திருப்பி அனுப்புற, வட்டிக்காரன் வந்து கத்திட்டு போறான் பணத்தை வாங்கி குடுக்குறதை விட்டுபுட்டு எங்களை அதிகாரம் பண்ணிகிட்டிருக்க என திட்ட, அன்னலட்சுமி குறுக்கிட்டு இங்க பாருங்க என் மருமக என்ன சொன்னாலும் யாரும் எதுவும் திருப்பி பேசக் கூடாது.. அவ செய்யுறது தான் சரி என சொல்ல சின்னா, பரமு அதிர்ச்சி அடைகிறார்கள்.

  செந்தில் அம்மாவிடம் வந்து நீ என் கிட்ட பேச மாட்டேன்னு எனக்கு தெரியும் எதுவா இருந்தாலும் உன் கிட்ட சொல்லிட்டு போனாதான் நல்லதே நடக்கும். இன்னைக்கு நான் புது வேலைக்கு இண்டர்வியூ போவதாக சொல்லிவிட்டு வெளியே கிளம்ப அன்னலட்சுமி எதுவும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்.

  செந்தில் பேண்ட் சர்ட் போட்டு வெளியே வர, சமையல் காண்ட்ராக்டர் என்னப்பா ஆபிசர் மாதிரி வந்திருக்க, போ போயி எடுபிடி வேலை செய்யுற மாதிரி டிரஸ் போட்டு விட்டு வா என சொல்ல செந்தில் வீட்டிற்கு வந்து உடை மாற்றி செல்கிறான்.

  Also read... அட்லீ இயக்கும் ஜவான் பட கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையா? - தயாரிப்பாளர் சங்கத்திற்கு பறந்த புகார்!

  செந்தில் மண்டபத்திற்கு சென்று இறங்க காண்ட்ராக்டர் அவனிடம் அரிசி மூட்டைகளை இறக்கி சமையலறையில் வைக்க சொல்ல ஒரு கட்டத்தில் செந்தில் அங்கு அமுதாவை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அவன் அமுதாவிடம் பேச முயல, காண்ட்ராக்டர் வந்தவர் என்னப்பா நீ பொம்பளை பிள்ளையை பார்த்த உடனே பேச ஆரம்பிச்சிருவியா, இதுக்கு தான்யா சின்ன பசங்களை வேலைக்கு கூட்டிட்டு வரக் கூடாது என திட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv