ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் செந்திலை எச்சரிக்கும் நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

மீண்டும் செந்திலை எச்சரிக்கும் நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

மீண்டும் செந்திலை  எச்சரிக்கும் நாகு, அமுதாவிடம் உண்மையை சொல்லப்போகும் மாணிக்கம் அடுத்து நடந்தது என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் செந்தில் காரில் வந்து இறங்க, சிதம்பரம் செந்திலிடம் என்ன ஆச்சு என கேக்க மாணிக்கம் சிதம்பரத்திடம் எல்லா விஷயமும் நாகுவுக்கு தெரியும் என சொல்கிறார்.

  சிதம்பரம் நாகுவிடம் கேக்க, நாகு சமாளித்தபடி ஆமா என் கிட்ட சொல்லிட்டு தான் போனாங்க என சொல்ல, சிதம்பரம் அவளை திட்டுகிறார். பிறகு மாணிக்கம் செந்திலிடம் எப்படிடா வந்த என கேக்க, உமாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்ததாகவும் அதில் தான் வராவிட்டால் அமுதா தற்கொலை செய்து கொள்வாள் என இருந்ததாகவும் அதனால் தான் பதறி போய் வந்ததாக கூறுகிறான்.

  உமா கண்ணாடி முன் நின்று செந்தில் நீ மேடை ஏறனும் அவமானப்படனும் என சிரித்துக் கொள்கிறாள். நாகு செந்திலுக்கு போன் செய்து மொட்டை மாடிக்கு வரச் சொல்கிறாள். நாகு செந்திலிடம் நீ வந்ததுல எனக்கு ஒரு வகைல சந்தோஷம்.. இது தான் கடைசி சான்ஸ் ஓடிப் போயிரு என சொல்லுகிறாள்.

  மாணிக்கத்தை பார்த்து இவன் பண்ணுன பிராடுத்தனத்துக்கு கூட இருந்தீங்கல, உங்க மருமகனுக்கு எடுத்துச் சொல்லுங்க என எச்சரித்து விட்டு கிளம்புகிறாள். மாணிக்கம் உண்மையை அமுதாவிடம் சொல்லிவிடலாம் என அமுதா ரூமுக்கு போகிறான்.

  Also read... தீபாவளி ரேஸில் 'சர்தார்'.. 'பிரின்ஸ்'! அதிகாலை ஷோவுக்கு ப்ளான்! அரசுக்கு பறந்த கோரிக்கை

  அமுதா ஒரு குழந்தையிடம் மாமா வாத்தியார் தான், உனக்கு பாடம் எடுக்க சொல்றேன், நானும் அவர் கிட்ட படிச்சி தான் டீச்சர் ஆகப் போறேன் என பேசிக் கொண்டிருக்க இவ்வளவு கனவோட இருக்குற அமுதா கிட்ட எப்படி உண்மையை சொல்றது என புலம்பியபடி, அன்னலட்சுமியிடம் உண்மையை சொல்லி விடலாம் என நகர்கிறார். இன்னொரு பக்கம் செந்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். இதனால் அடுத்த நடக்கப் போவது என்ன மாணிக்கம் யாரிடம் உண்மையை சொல்லப் போகிறார்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv