முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாகு மிரட்டியதால் செந்தில் எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

நாகு மிரட்டியதால் செந்தில் எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

நாகு மிரட்டியதால் செந்தில் எடுத்த முடிவு, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் நாகு செந்திலிடம் ஒழுங்கு மரியாதையா இப்படியே இந்த காரோட ஓடி போயிரு மீறி மண்டபதுக்கு வந்த உங்க ஆத்தாகாரிட்ட உண்மையை சொல்லிருவேன் அப்பறம் நீ அவங்கள தூக்கிட்டு சுடுகாடு தான் போகணும். என்ன சொன்னது புரிஞ்சதா, என மிரட்டுகிறாள். செந்தில் என்ன செய்வது என தெரியாமல் நாகு சொன்னது திரும்ப திரும்ப காதில் கேட்க, ஒரு முடிவுடன் காரில் ஏறுகிறான்.

வீட்டிற்கு வந்த நாகுவிடம் கோமதி காரியம் நல்லபடியா முடிஞ்சுதா என கேக்க, நாகு பூசாரி ஏதோ பண்ணிட்டார் என சொல்ல, கோமதி அவளை திட்டுகிறாள். நாகு அவளிடம் நான் செந்திலை நேரடியாக மிரட்டி மண்டபத்துக்கு வரக் கூடாதுன்னு சொல்லிட்டேன் அவன் வரமாட்டான், நாம வெளில போயி, அவன் வராம அமுதா தவிக்கிறதை போய் ரசிப்போம் என சொல்லி வெளியே வருகிறாள்.

வெளியே அனைவரும் செந்திலின் வருகைக்காக காத்திருக்க, செந்தில் அழுதபடி நாகு சொன்னதை நினைத்து பீல் பண்ணியவாறு இருக்க பிறகு ஓரிடத்தில் டிரைவரிடம் காரை நிறுத்த சொல்லி அவனை போ என சொல்கிறான்.

பின்னர் அனைவரும் காத்திருக்க, அன்னலட்சுமி அமுதாவிடம் செந்திலுக்கு போன் செய்யுமாறு கூற, செந்தில் அமுதாவின் போனை எடுக்காமல் இருக்க, அமுதா பதட்டமாகிறாள். பின்னர் செந்தில் அமுதா என்னை மன்னித்து விடு என தனியே புலம்பியபடி ஓரிடத்தில் அமர்கிறான்.

அடுத்து மாணிக்கம் தனியே வந்து செந்திலுக்கு கால் பண்ணுகிறான். செந்தில் போனை எடுத்து மாமா நீயும் என்னை ஏமாத்திட்டல்ல, அமுதாவுக்கு எல்லாம் உண்மையும் தெரியும்னு என் கிட்ட ஏன் மாமா பொய் சொன்ன என கேக்க, மாணிக்கம் பதில் சொல்ல முடியாமல் உடைந்து அழுகிறான்.

மாணிக்கம் மண்டபத்துக்கு வா நான் உன்னை அமுதாவோட சேர்த்து வைக்கிறேன் என சொல்ல, செந்தில் போனை கட் பண்ணுகிறான். மாணிக்கம் மீண்டும் போன் அடிக்க செந்தில் எடுக்காமல் இருக்கிறான்.

Also read... 'வாடகை தாய் விவகாரம்.. அதிகாரிகளே முடிவு செய்வார்கள்' - நயன் விக்கி ஜோடி குறித்து அமைச்சர் விளக்கம்

பிறகு மாணிக்கம் அமுதாவை பார்க்க, அமுதா வருத்தத்துடன் கார் வருகிறதா என பார்த்துக் கொண்டிருக்க கார் வரும் சத்தம் கேக்க, அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க, மாணிக்கம் செந்தில் வர மாட்டான் என பார்த்துக் கொண்டிருக்க, காரில் இருந்து செந்தில் இறங்க, அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர். நாகு, கோமதி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? நாகு அடுத்து என்ன செய்யப் போகிறாள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv