ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இப்படியே ஓடிப் போயிடு... செந்திலை எச்சரிக்கும் நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

இப்படியே ஓடிப் போயிடு... செந்திலை எச்சரிக்கும் நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

இப்படியே ஓடிப் போயிடு, செந்திலை எச்சரிக்கும் நாகு, அனைவருக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி அடுத்து அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடக்கப் போவது என்ன.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் பூசாரி பூஜையை தொடங்கி சாமியின் தல வரலாறு சொல்லி இரண்டு மாப்பிளைகளையும் தேங்காயை தொட்டு கொடுக்க சொல்கிறார்.  மேலும் மனத்தில் பொய் இருந்தால் தேங்காய் அழுகிவிடும் என சொல்ல செந்தில் ஷாக் ஆகிறான். ரெண்டு பொம்பளைங்க நல்லா இருக்கணும்னு வேண்டிக்க, உன் நல்ல மனசுக்கு அந்த கடவுள் உன்னை தண்டிக்க மாட்டாரு என மாமா ஆறுதல் சொல்கிறார்.

  அடுத்து தேங்காய் உடைக்க, செந்தில் டென்ஷனாக இருக்க, தேங்காய் நல்லவிதமாக பூவுடன் இருப்பதை பார்த்துஅன்னம், மாணிக்கம், செந்தில் ஆகியோர் சந்தோசப்பட, நாகு டென்ஷன் ஆகிறாள். தேங்காய் மாறிவிட்டாதா என யோசிக்க, பழனிக்கு உடைக்கும் தேங்காயும் நல்லவிதமாக இருக்க, நாகு குழப்பம் அடைகிறாள்.

  அனைவரும் கிளம்பி கோவில் வாசலுக்கு வர புது கார் நின்று கொண்டிருக்க அனைவரும் ஆச்சரியமாக பார்க்க, என் மாப்ள செந்திலுக்கு இந்த சிதம்பரத்தோட பரிசு என சொல்ல, உமா டென்ஷன் ஆகிறாள். அனைவரும் வண்டியேருங்க மண்டபம் போகலாம், மாப்ள நீங்க புது கார்ல தான் மண்டபத்துக்கு வரணும் என சிதம்பரம் சொல்கிறார்.

  பிறகு செந்தில் கார் ஏற போக, வணக்கம் வாத்தி என குரல் கேட்க, செந்தில் திரும்ப, நாகு நிற்கிறாள்.  ஏன்டா பிராடு என நாகு சொல்ல, மரியாதையா பேசுங்க என செந்தில் சொல்ல, ஒரு பூயூனுக்கு இந்த மரியாதை போதும் என சொல்ல செந்தில் ஷாக் ஆகிறான், என்ன தைரியம் இருந்தா வாத்தியாருனு பொய் சொல்லி ஒரு பொண்ணோட வாழ்க்கைய ஏமாத்த பார்ப்ப, நீயெல்லாம் ஒரு மனுஷனா என சொல்ல செந்தில் அதிர்ச்சி அடைகிறான்.

  Also read... பூஜையுடன் தொடங்கியது ஹன்சிகா படத்தின் ஷூட்டிங்!

  ஒழுங்கு மரியாதையா இப்படியே இந்த காரோட ஓடி போயிரு மீறி மண்டபதுக்கு வந்த உங்க ஆத்தாகாரிட்ட உண்மையை சொல்லி விடுவேன் என மிரட்டுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் செந்தில் என்ன செய்யப் போகிறான்? அடுத்து நடக்கப் போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv