ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மணமேடையில் அமுதா செந்தில்... அதிர்ச்சி கொடுத்த சின்னா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

மணமேடையில் அமுதா செந்தில்... அதிர்ச்சி கொடுத்த சின்னா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

மணமேடையில் அமுதா செந்தில் இருக்க அதிர்ச்சி கொடுத்த சின்னா, அடுத்து நடந்தது என்ன அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்‌. பழனி அனுப்பிய வீடியோவால் மண்டபத்துக்கு வந்த போலீஸ் விசாரிக்க வேண்டும் என சொல்ல சிதம்பரம் அவர்களிடம் பேசி அனுப்பி வைத்தார்.

  இன்றைய எபிசோடில் அமுதா செந்திலிடம் துரையை என்ன செய்தீர்கள் என கேட்க, சும்மா மிரட்டினேன் என சொல்ல, அமுதா பயமாக இருக்கிறது என சொல்ல, செந்தில் அவளிடம் எதுவும் ஆகாது பயப்படாதே என தைரியம் சொல்கிறான். அதை பழனி கேட்டுக் கொண்டிருக்கிறான்.

  பின்னர் கல்யாணம் மண்டப வாசலில் லோடு வண்டி வந்து நிற்க கண்ணன் காய்கறி இறக்குபவன் போல உள்ளே வருகிறான். நாகு அவனிடம் யார் கண்ணிலும் படாமல் இரு, சமயம் வரும் போது தான் சொல்லுவதாக சொல்ல, கண்ணன் தாலியை எடுத்துப் பார்க்கிறான்.

  நாகுவும் , நாகுவின் அம்மாவும் அமுதாவை ரிசப்ஷனுக்கு தயார் செய்து அவளை புகழ்கின்றனர். நாகு மனதிற்குள் உன்னை இவ்வளவு அழகா ரெடி பண்றது அந்த வாத்தியோட நீ ரிசப்ஷன்ல நிக்குறதுக்கு இல்ல, என் தம்பி கூட தான் உனக்கு கல்யாணம் என நினைத்துக் கொள்கிறாள்.

  செந்தில்-அமுதா, பழனி-உமா மணமேடைக்கு அழைத்து விழாவை ஆரம்பிக்க போக, சின்னா நிறுத்துங்க என சொல்ல அனைவரும் ஷாக் ஆகி நிற்கின்றனர். மாணிக்கம் என்ன பஞ்சாயத்து இழுத்து வைக்க போறானோ என பயப்பட சின்னா பில்டப் குடுத்து, டான்ஸ் ஆட வேண்டாமா என சொல்ல அனைவரும் நிம்மதி அடைய பின்னர் சின்னா நடனமாடி தொடங்கி வைக்கிறார்.

  Also read... தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்வதற்கு இது தான் காரணம் - இயக்குநர் வெற்றிமாறன்

  மண்டபத்துக்குள் புகுந்த கண்ணன் செய்யப்போகும் வேலை என்ன? அமுதா செந்தில் கல்யாணம் நல்லபடியாக நடக்குமா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv