ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மன்னிப்பு கேட்க பஞ்சாயத்துக்கு போன அமுதாவிற்கு காத்திருந்த ட்விஸ்ட் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

மன்னிப்பு கேட்க பஞ்சாயத்துக்கு போன அமுதாவிற்கு காத்திருந்த ட்விஸ்ட் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

மன்னிப்பு கேட்க பஞ்சாயத்துக்கு போன அமுதாவிற்கு காத்திருந்த ட்விஸ்ட், சின்னா கொடுத்த ஷாக்  என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் அன்னலட்சுமி அவர்கள் உன்னை பஞ்சாயத்தில் மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்ற விஷயத்தை சொல்ல அமுதா நான் மன்னிப்பு கேட்கிறேன் என சொல்ல அன்னம் வேண்டாம் என வருந்துகிறாள்‌.

அடுத்து உமாவும், பழனியும் வீட்டிற்கு வர உமா அமுதாவிடம் நீ பண்ணதுக்கெல்லாம் இப்ப அனுபவிக்கிற, நாளைக்கு ஊர் முன்னாடி நீ அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு தான் ஆகனும்.. அதை நான் பார்க்க தான் போறேன்.. செந்தில் வெளியே இருந்து உள்ளே வர, மாணிக்கம் எங்க போயிட்டு வர்ற கேக்க, அக்கா, மாமா வெளில இருக்காங்க, என்ன இருந்தாலும் அக்கால்ல என சொல்ல, உன் பொண்டாட்டி குடும்பத்துக்காக இங்க கஷ்டப்பட்டுகிட்டிருக்கா அதை நீ கண்டுக்காம அவங்களை பத்தி யோசிக்கிற என திட்டுகிறார்.

மறுநாள் காலை அமுதா கிளம்ப, இளங்கோ அமுதாவிற்கு போன் செய்ய நீ எல்லார் முன்னாடியும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டேன்னா அப்புச்சிக்கு இன்னும் அசிங்கமாயிரும், அப்புச்சியை எதிர்த்துட்டு போன நீ அங்கயும் அவமானப்பட வேண்டாம் என சொல்ல அன்னலட்சுமியும், மாணிக்கமும் வேண்டாம் என சொல்ல , அமுதா கிளம்பி செல்கிறாள்.

பிறகு அமுதா அங்கு வர சின்னா அவளிடம் நீ எதுக்கும்மா இங்க வந்த வா வீட்டுக்கு போலாம் என சொல்ல வடிவேலு சைகையில் அமுதாவிடம் மன்னிப்பு கேளு என சொல்ல, சின்னா வடிவேலுவிடம் என்ன மாப்பிள்ளை கைய காட்டிகிட்டிருக்க வா மாப்பிள்ளை கிளம்புவோம் என அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்புகிறான். அனைவரும் வீட்டிற்கு வர, பரமு அமுதாவிடம் நான் மாவு ஆட்டுறேன், என் மாமா மாவை கொண்டு எங்க குடுக்கனுமோ அங்க குடுப்பாக என சொல்ல அமுதா, அன்னலட்சுமி புரியாமல் பார்க்க, சின்னா சும்மா நாங்க தமாஷ் பண்ணுனோம் என சமாளிக்கிறான்.

Also read... முழுமதி அவளது முகமாகும்... நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மாணிக்கம் செந்திலிடம் என்ன நடந்துச்சு என கேக்க, செந்தில் சின்னாவின் அம்மாவை அழைத்து வர அவர் சின்னாவை நீ எல்லாம் என் வயித்துல தான் பிறந்தியா என வெளுத்து வாங்குகிறார். பரமு தடுக்க போய் கோபப்பட அவளுக்கும் அடி விழுகிறது. இப்படியாக சின்னாவின் அம்மாவால் இருவரும் மாறிய விஷயம் தெரிய வருகிறது. அடுத்து நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv