ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அவமானத்தால் சாகத் துணிந்த அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அவமானத்தால் சாகத் துணிந்த அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அவமானத்தால் சாகத் துணிந்த அன்னம், அமுதா எடுத்த அதிரடி முடிவு என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் செந்திலின் அப்பா கதிரேசனின் போட்டோவை பழனி ஆட்கள் வைத்து உடைக்க அன்னம் மயங்கி சாய்கிறாள்.

  அடுத்து வடிவேலு கோயிலுக்கு போனோமா காரியத்தை செஞ்சோமன்னு இல்லாம ஸ்கூலுக்கு போயி அசிங்கப்பட்டீங்களா, உன் பையன் தான் பிராடு பண்ணி உன்னை அசிங்கப்படுத்துன்னான்னு பார்த்தா உன் மருமகளும் உன்னை கூட்டிட்டு போய் ஊரு முன்னால அசிங்கப்படுத்திருக்கா என சொல்லி திட்டிவிட்டு வடிவேலு கிளம்பி செல்கிறான். அன்னலட்சுமி வேதனையுடன் அழுகிறாள்.

  அடுத்து அன்னலட்சுமி ரூமின் உள்ளே சென்று தூக்கு மாட்டிக் கொள்ள முயல, அமுதா அவளை காப்பாத்துகிறாள். எல்லாம் சரியாகும் என அமுதா சொல்கிறாள்.

  அடுத்து கோவிலில் அமுதா வேண்டுதல் செய்கிறாள். வேண்டி செய்து முடித்து ஓரிடத்தில் அமர்ந்து யோசிக்க, கோவிலில் இருந்த அம்மா ஏன்ம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டுதல் பண்ற, உன் உதவிக்கு யாருமே வரலையா இரு தண்ணி எடுத்துட்டு வர்றேன் என சொல்லியபடி அந்த அம்மா நகர ஒரு சிறுவன் அமுதாவிற்கு மோர் கொண்டு வந்து கொடுக்கிறான்.

  அடுத்து சிறுவன் எதற்காக இந்த வேண்டுதல் என கேக்க, அமுதா உனக்கு புரியாது என சொல்ல எனக்கு எல்லாம் புரியும் நீ என்னன்னு சொல்லு, என கேக்க, அமுதா விஷயத்தை சொல்ல, உன் கஷ்டத்துலயே பதில் இருக்கு என சொல்லிவிட்டு விபூதியை பூசிவிட்டு செல்ல அந்த அம்மா தண்ணீரை கொண்டு வர, தனக்கு சிறுவன் மோர் குடுத்ததாக சொல்ல, அப்படியே யாருமே இங்க இல்லையே என சொல்ல அமுதா யோசிக்கிறாள்.

  அடுத்து செந்தில் வீட்டில் பைக்கை துடைத்துக் கொண்டிருக்க அமுதா மாணிக்கத்திடம் பைக்கை எடுத்து என் கூட வரச் சொல்லுங்க என சொல்கிறாள். மாணிக்கம் செந்திலிடம் உன் பொண்டாட்டி கூப்பிடுறாய்யா போயிட்டு வா என சொல்ல அமுதா மாணிக்கத்தையும் உடன் அழைக்கிறாள்.

  Also read... சிவப்பு மல்லி படப்பிடிப்பில் விஜயகாந்த் காட்டிய சின்சியாரிட்டி

  அமுதாவிடம் மாணிக்கம் எதுக்கும்மா வரச் சொன்னே என கேக்க, , அமுதா செந்திலை வாத்தியாராக்க போறேன் அதுக்கு என்ன பண்ணனும் என கேட்க இருவரும் ஷாக்காகின்றனர். செந்திலிடம் அமுதா நீ சொன்ன பொய்யை உண்மையாக்கு.. அப்ப தான் உன் அம்மாவோட அன்பு கிடைக்கும் என சொல்ல  உன் அன்பும் கிடைக்கும்ல என கேக்க, அமுதா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்கிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv