ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுதாவை வெளியே துரத்த ஒன்று சேரும் பரமு, சின்னா, வடிவேலு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவை வெளியே துரத்த ஒன்று சேரும் பரமு, சின்னா, வடிவேலு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவை வெளியே துரத்த ஒன்று சேரும் பரமு, சின்னா மற்றும் வடிவேலு, அடுத்து நடக்கப்போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் அமுதா வந்து அன்னத்திடம் பேச அன்னம் மாணிக்கம் வீட்டை விட்டு போனதை சொல்லி, பழைய கதையை சொல்லி அழ, அமுதா அன்னத்தை கூட்டிக்கொண்டு மாணிக்கத்தை தேட கிளம்புகிறாள்.

  மாணிக்கத்தை அமுதா அன்னம் தேடி திரும்ப வீட்டிற்கு கூப்பிட்டு வருகிறாள். வீட்டிற்கு மாணிக்கத்திடம் வடிவேல் சண்டை போட, அமுதா வடிவேலை திட்டி இனி யாரும் வீட்டில் தண்ட சோறாக இருக்க முடியாது. கடை கணக்கு வழக்கு எல்லாம் தெரியனும் என சொல்கிறாள்.

  அடுத்து பரமு-சின்னா- வடிவேல் அமுதாவை வீட்டைவிட்டு விரட்ட வேண்டும் என முடிவுக்கு வருகின்றனர். பின்னர் நதியாவின் அப்பா அம்மா செந்தில் வீட்டுக்கு வர, நதியா அவர்கள் கல்யாணத்துக்கு கூப்பிடாததால் வரமுடியவில்லை என சொல்லி கிப்ட் கொடுக்கிறாள்.

  Also read... திரைப்படங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - அமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

  பின் நதியாவின் அம்மா அவளுக்கு ஜாதகத்தில் கண்டம் இருப்பதால் உயிருக்கு ஆபத்து இருக்கு, அதனால் அவளை தத்து வாங்கிக் கொள்ளுமாறு கேட்கிறார்கள். அமுதா, செந்தில் யோசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன? அமுதா தனக்கு எதிராக ஒன்று சேரும் பரமு சின்னா, வடிவேலுவை எப்படி எதிர்கொள்ள போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv