ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பஞ்சாயத்தில் அமுதாவின் பதிலால் சிதம்பரம் எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

பஞ்சாயத்தில் அமுதாவின் பதிலால் சிதம்பரம் எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

பஞ்சாயத்தில் அமுதா கொடுத்த பதிலால் சிதம்பரம் எடுத்த அதிரடி முடிவு என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் அமுதா மாணிக்கத்திடம் பணம் கொடுத்து வட்டி கட்ட சொல்ல அதை செந்தில் மறுத்து வேண்டாம் தான் கட்டி கொள்வதாக சொல்ல அன்னம் குடும்ப மானம் மரியாதை போவதாக அவனை திட்டுகிறாள்.

    செந்தில் வட்டி கட்ட அமுதாவுடன்தான் போவேன் என சொல்ல அமுதா முதல் முறையாக அவனுடன் பைக்கில் ஏறி கிளம்புகிறாள். பஞ்சாயத்தில் அமுதா சிதம்பரத்திடம் பேச இந்த உறவை என்னைக்கு நான் முறிச்சிக்க முடியாது.. யார் நினைச்சாலும் எதுவும் பண்ண முடியாது. நீங்களே என்னை வேண்டாம்னு சொன்னாலும், எனக்கு நீங்க வேணும் அப்புச்சி, அதனால இந்த உறவை நான் முறிச்சிக்க மாட்டேன் என சொல்கிறாள்.

    அடுத்து அன்னம் அமுதாவிடம் வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என சொல்ல அமுதா அவளிடம் ஒரு 10,000 பணம் வேணும் என சொல்ல அன்னம் தாலியை எடுத்து கொடுக்க அமுதா அதை வாங்க மறுக்கிறாள். சிதம்பரம் வட்டிக்கு குடுத்தவனிடம் பணத்தை செட்டில் செய்கிறார். செட்டில் செய்தபின், ரோட்டில் ஒரு பொம்பளையை சேலையை பிடித்து இழுத்தது தவறு என அவனை கன்னத்தில் அறைகிறார்.

    Also read... பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் ஜனனி... வெளியானது வீடியோ!

    இந்த பக்கம் கிரைண்டர் வந்து இறங்குகிறது. இட்லி, தோசை மாவு இங்கே கிடைக்கும் என போர்டு மாட்ட வடிவேல், பரமு, சின்னா பார்க்க செந்தில் என்னவென்று கேட்க, அன்னலட்சுமி நாங்க பொய் சொல்லலை, திருடலை என முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv