ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அன்னலட்சுமியின் சேலையை உருவி அசிங்கப்படுத்திய பழனி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அன்னலட்சுமியின் சேலையை உருவி அசிங்கப்படுத்திய பழனி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அன்னலட்சுமியின் சேலையை உருவி அசிங்கப்படுத்திய பழனி, அமுதா எடுத்த அதிரடி முடிவால் ஷாக்கான செந்தில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் சந்தையில் பழனி ஆட்களை செட் செய்து கடன் தொகையை கேட்டு அன்னத்தை சேலையை பிடித்து இழுத்து புவனாவை தள்ளி விட புவனா கீழே விழுகிறாள். அவர்கள் அவமானப்படுவதை சந்தையே பார்க்கிறது.

  அடுத்து அன்னலட்சுமி நடந்ததை வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என புவனாவிடம் சொல்ல வெளியில் இருந்து வரும் அமுதா இருவரையும் பார்க்க இருவரும் கண் கலங்கி இருப்பதை தெரிந்து கொள்கிறாள். அமுதா என்ன நடந்தது என கேட்க, அன்னலட்சுமி மார்கெட்டில் நடந்தவற்றை மறைத்து மழுப்புகிறாள்.

  இதனால் அமுதா புவனாவிடம் சொல்லுமாறு சொல்ல, புவனா அழுதபடியே நடந்தவற்றை மறைக்க முடியாமல் உண்மையை சொல்லி விடுகிறாள். அமுதா கோபம் கொள்ள மாணிக்கம் செந்திலுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி, உடனே வருமாறு கூறுகிறார்.

  அமுதா அன்னலட்சுமி, புவனாவை அழைத்துக் கொண்டு மார்க்கெட் வர அன்னலட்சுமியை பார்த்து வட்டிக்கடைக்காரன் என்ன பணம் கொண்டு வந்துட்டியா குடு குடு என கேக்க, நான் குடுக்குறேன் என அவர்களை விலக்கி விட்டு பில்டப்பில் ஹைஸ்பிடீல் நடந்து வர வட்டிக்கடைக்காரன் ஏளனமாக பார்க்க, அமுதா அவனை அடித்து வெளுக்கிறாள்.

  Also read... பிக்பாஸ் வீட்டில் முட்டிக்கொள்ளும் மணிகண்டன் மற்றும் தனலட்சிமி - வெளியானது கலேபர ப்ரோமோ!

  அமுதா அவனது வேட்டியை உருவி விட செந்தில் வேகமாக வந்து பார்க்க, அமுதா அவனை அடித்து வெளுப்பதை பார்த்து ஷாக்காக அன்னலட்சுமி உணர்ச்சி பெருக்குடன் அமுதாவை கட்டி அணைத்து நீ தான்ம்மா என் குலசாமி, அவமானப்பட்டு நிக்குற என் குடும்பத்தை நீ தான்மா தலைநிமிர வைச்சிட்டே என பெருமிதம் கொள்கிறாள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv