ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மண்டபத்தில் வேலைக்காரி கோலத்தில் அமுதாவை பார்த்த சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

மண்டபத்தில் வேலைக்காரி கோலத்தில் அமுதாவை பார்த்த சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

மண்டபத்தில் வேலைக்காரி கோலத்தில் அமுதாவை பார்த்த சிதம்பரத்திற்கு நடந்த சோகம், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் பழனி சிதம்பரத்திடம் வாங்க மாமா கீழ தான் சாப்பிடுற இடம், நான் எங்கயும் சாப்பிடுறதில்லை என சிதம்பரம் சொல்ல, பழனி இல்ல மாமா நம்ம வீட்டு கல்யாணத்துக்கு பேசிருந்த சமையல்காரர் தான் இங்கயும் சமையல் பண்றாரு கடைசி நேரத்துல வரமாட்டேன்னு சொல்லி கழுத்தறுத்துட்டான்.

    சிதம்பரம் மூணு தலைமுறையா நம்ம வீட்டு பங்ஷனுக்கு அவன் தான் பண்ணுவான்.. அன்னைக்கு ஏன் அவன் அப்படி பண்ணிட்டு போனான்னு தெரியலை.. வாங்க மாமா அவன் இங்க தான் இருக்கான்.. போய் ஒரு எட்டு கேட்டுட்டு வந்துருவோம் என அழைத்து செல்ல அங்கு குமரேசன் சாப்பிட சொல்லி உட்கார வைக்க  அங்கு செந்தில் பரிமாறுவதை பார்த்து டென்ஷன் ஆகிறார்.

    அடுத்து அங்கிருந்து கிளம்ப சமையல்காரர் மோராவது குடிச்சிட்டு போங்க என சொல்ல சிதம்பரம் மோர் குடிக்க அப்போது காண்ட்ராக்டர் அமுதாவை இலை எடுக்க சொல்ல அமுதாவை அப்படி ஒரு கோணத்தில் பார்த்த சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார்.

    Also read... முதல் வெளியீட்டில் நஷ்டத்தை கொடுத்த சிவாஜியின் கப்பலோட்டிய தமிழன் - காரணம் இதுதான்

    சிதம்பரம் செந்திலிடம் எப்படி இருந்த என் மகளை இப்படி ஆக்கிட்டியே என கோபத்துடன் அவனை அடித்து அழுதபடி மயங்கி விழுகிறார். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? அமுதா செந்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv