முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. புவனாவை சுற்றி வளைத்த ரவுடிகள் - 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்

அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. புவனாவை சுற்றி வளைத்த ரவுடிகள் - 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

கல்யாண மண்டபத்தில் அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, புவனாவை சுற்றி வளைத்த ரவுடிகள் ‌என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புவனா தனியே நடந்து வர செல்வா தனியாக வந்து புவனாவை சந்திக்கிறான். ஸ்டேஷனுக்கு போன் செய்து கம்பளைண்ட் செய்தது தான் என்ற உண்மையை உடைக்கிறான்.

மேலும் உன்னை கட்டிக்கிடுறதுக்காக நான் எவ்வளவோ முயற்சி பண்றேன், நான் பண்ற முயற்சிக்கு கொஞ்சம் கூட ஒத்துழைக்க மாட்டேங்குற, உன்னை கூப்டு சொல்ல சொன்னப்ப நீ சொல்லி இருக்கலாம், அப்பவும் நீ ஏன் சொல்லலை என சொல்ல அமுதா வந்தவள் செல்வா நீ தான் எல்லாத்தையும் பண்ணுனியா, ஏற்கனவே நீ நிறைய காயப்படுத்திட்ட இனிமேல இப்படி செய்யாத உனக்கு நல்லதில்லை என அமுதா சொல்ல, செல்வா நான் புவனா கழுத்துல தாலி கட்டியே தீருவேன் என சொல்கிறான்.

பிறகு இரவு வீட்டின் பின்னால் புவனா தனியாக இருக்க, செந்தில் அங்கு வருகிறான். செந்தில் புவனாவிடம் செல்வாவை உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன், எல்லாரையும் நான் கஷ்டப்படுத்திட்டேன்.. அம்மா நான் வாத்தியாராகனும்னு ரொம்ப கனவு கண்டாங்க அதையும் என்னால பண்ண முடியலை, அமுதா என்னை ரொம்ப நம்புச்சு அவ வாழ்க்கையையும் ஏமாத்திட்டேன் என சொல்லி அழ, ஒரு வேளை நான் வாத்தியாரா கவுரமா இருந்தா அமுதா மாப்பிள்ளை கேட்டு உனக்கு பிடிச்சவனை கட்டி வச்சிருப்பா.. நான் சொன்ன பொய் வந்து இவ்வளவு தூரம் உன் வாழ்க்கையையும் பாதிக்கும்னு நினைக்கலை என கலங்குகிறான்.

அதோடு ரௌடியா இருந்தா கூட வெட்டு குத்துன்னு இறங்கி உனக்கு பிடிச்ச வாழ்க்கையை என்னால செஞ்சிருக்க முடியும்..ஆனா என்னால எதுவுமே முடியலை.. , புவனா கலங்கியபடி என்னன்னே நீ எனக்கு புரியுது.. நான் அந்த வீட்டுக்குள்ள போனா எல்லாருக்கும் கஷ்டம் தான்.. அண்ணி நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க, அவங்களுக்காக என் வாழ்க்கையை விட்டு குடுக்றதில்லை ஒண்ணும் தப்பில்லை.. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்னே அது தான் எனக்கு முக்கியம் என சொல்ல அமுதா, அன்னலட்சுமி இருவரும் பீல் செய்கின்றனர்.

பிறகு அனைவரும் கல்யாணத்திற்கு வீட்டில் இருந்து கிளம்ப புவனாவை விட்டு செல்கிறான். மண்டபத்துக்கு அமுதா குடும்பத்துடன் வந்து இறங்க, உமாவும் பழனியும் அமுதாவிடம் நீ இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதோ பிளான் வச்சிருக்க, என்னன்னு சொல்லு என கேக்க, இந்த கல்யாணம் நல்லபடியா நடந்து முடியும் அப்ப உனக்கு தெரியும் என அமுதா பதிலடி கொடுக்கிறாள்.

வீட்டில் அனைவரும் படுத்து உறங்கி கொண்டிருக்க, அமுதா செல்வாவின் ரூமை பார்க்க, அங்கு செல்வா இல்லாமல் இருக்க அமுதா ஷாக் ஆகிறாள். செந்திலின் வீட்டில் புவனா மட்டும் தனியா இருக்க , கதவை தட்டும் சத்தம் கேட்டு புவனா திறக்க, ரவுடிகள் நான்கு பேர் நின்று நிற்க புவனா கதவை சாத்தி விட்டு செந்திலுக்கு விஷயத்தை சொல்ல செந்தில் அமுதாவுடன் கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv