முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அம்மனாக மாறிய அமுதா... கோவில் பூஜையில் ஷாக்கான உமா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அம்மனாக மாறிய அமுதா... கோவில் பூஜையில் ஷாக்கான உமா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அம்மனாக மாறிய அமுதா, கோவில் பூஜையில் உமாவுக்கு ஷாக் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோவிலில் நடக்கும் பூஜையில் பூசாரி மாலையை கையில் வைத்தபடி ஆக்ரோஷமாக உமா கழுத்தில் போட்டு திருநீறை பூச அனைவரும் பார்க்க, பூசாரி ஆக்ரோஷமாக வாளால் அமுதா மீது வீசப் போக, பூசாரி கண்ணுக்கு அமுதா அம்மன் போல தெரிகிறாள்‌.

இதனால் பூசாரி நிலைதடுமாறி சூலத்தின் மீது இடிக்க குமரேசன் கையில் வாளால் கீறல் விழுகிறது. அதுமட்டுமல்லாமல் சூலத்தின் மீது இருந்த மாலை அமுதா கழுத்தில் விழுகிறது‌.

எனவே இருவருக்கும் கருப்பன் வாக்கு குடுத்து விட்டார் என ஊர்மக்கள் சொல்லி இருவரையும் விரதம் இருக்க சொல்கின்றனர். விரதத்தின் போது இருவரும் வீட்டிற்கு செல்லக் கூடாது என சொல்லி இருவருக்கும் காப்பு கட்டி விடுகின்றனர்.

இதனால் பூசாரியை உமாவும் பழனியும் காசை வாங்கிட்டு ஏமாத்திட்ட என திட்டுகின்றனர். மேலும் புவனாவை உமா & கோ ஒழுங்கா தாலியை கழட்டி குடுத்துட்டு ஓடிப் போயிரு என மிரட்டிக் கொண்டிருக்க, புவனா என் அன்னமண்டிக்காக நான் தாலியை கழட்டி தந்துடுறேன் என கழட்டப் போக அங்கு வரும் அமுதா புவனாவிடம் நீ பயப்படாத, எனக்கு எதுவும் ஆகாது அந்த கருப்பன் துணை இருக்கான் என சொல்லி அமுதா உமா குடும்பத்தினரை திட்டுகிறாள்.

அடுத்து குமரேசன் தனது ஆட்களிடம் செல்வாவை குத்த சொல்ல அவரது ஆட்கள் செல்வாவை குத்தப் போக, புவனா குறுக்கே விழுந்து தடுக்கிறாள். பிறகு செந்திலும் மாணிக்கமும் ரவுடிகளை அடித்து விரட்டுகின்றனர்.

மாணிக்கம் புவனாவிடம் செல்வா வேண்டாம்னு சொன்ன, இப்ப ஏன் காப்பாத்துன என கேக்க, புவனா தனக்கு செல்வா வேண்டும், ஆனால் அன்னமண்டி வாழ்க்கை என சொல்ல, அமுதா அவளிடம் உன் தாலியை நான் இறங்க விட மாட்டேன், என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன் என சொல்கிறாள்.

அதன் பிறகு அமுதா, உமா இருவரிடம் தீப்பந்தத்தை குடுத்து, யாரு முதல்ல போய் மலைக்காளிக்கு விளக்கேத்திட்டு மெட்டியும் குங்குமம் எடுத்துட்டு வர்றாங்களோ அவங்க கேட்டதை தான் சாமி நிறைவேத்த சொல்றாருன்னு அர்த்தம் என ஊர்க்காரர்கள் சொல்ல இருவரும் தீப்பந்தத்துடன் காட்டுக்குள் செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv