முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பஞ்சாயத்தில் தாலியை கழட்ட முடிவெடுத்த புவனா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

பஞ்சாயத்தில் தாலியை கழட்ட முடிவெடுத்த புவனா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

பஞ்சாயத்தில் தாலியை கழட்ட முடிவெடுத்த புவனா, அமுதா கொடுத்த அதிர்ச்சி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் உமா என் மாமானார் குடும்பத்துக்கு ஒரு நியாயம் வேணும்ப்பா, அவங்க பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு முடிவு தெரியனும்பா. என சொல்கிறார்.

அடுத்து ஊர்காரர்கள் பத்திரிக்கை அடித்து ஊரை கூட்டி இப்ப ஒரு பொண்ணு வாழ்க்கைய இப்படி பண்ணிட்டீங்க, எப்படி வேணும்னா கயித்த எடுத்து கட்டுனா அதை தாலின்னு ஒத்துக்க முடியுமா? என சிதம்பரத்தை கேள்வி கேட்கின்றனர்.

மறுப்பக்கம் வீட்டிற்கு அன்னம் மாணிக்கம் எல்லாம் வர வடிவேல் வாசலில் நின்று அவர்களை திட்டி பஞ்சாயத்திற்கு வரச்சொல்லிருக்காங்க போங்க என சொல்ல, அவர்கள் அங்கிருந்து பஞ்சாயத்துக்கு கிளம்புகின்றனர்.

பிறகு புவனாவிடம் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா என கேக்க அவள் இல்லை என மறுக்கிறாள். பஞ்சாயத்தார் நம்ம ஊர் வழக்கப்படி தாலியை கழட்டி பால்ல போடனும், அதனால பொண்ணோட குடும்பத்தையும் வரச் சொல்லுங்க பஞ்சாயத்தில் வைத்து ஒரு முடிவு செய்வோம் என சொல்கிறார்கள்.

இந்த நேரத்தில் பஞ்சாயத்துக்கு அன்னம், மாணிக்கம் வர அங்கு பிரச்சனையாகிறது.  பொண்ணுக்கு விருப்பம் இல்லை, உங்களுக்கும் விருப்பம் இல்லை, பையன் வலுக்கட்டாயமா தாலிய கட்டி இந்த பொண்ணு வாழ்க்கைய அசிங்கப்படுத்திட்டான். இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகனும் என சொல்கின்றனர்.

அய்யா நாங்களே எதிர்பார்க்காம நடந்த விஷயம், இதுல நாங்க என்ன பண்ண முடியும் என கேக்க, எங்களுக்கும் தெரியும்மா, குமரேசன் பொண்ணுக்கு நடந்த அசிங்கத்துக்கு உங்க பொண்ணு கழுத்துல இருந்த தாலியை கழட்டி பால்ல போடுங்க என சொல்ல, அன்னம் அப்ப என் பொண்ணோட வாழ்க்கைய்யா என கேட்கிறாள். புவனா தாலியை கழட்ட முடியாது என சொல்கிறாள். அப்படி நான் கழட்டுனா எங்க அன்னமண்டிக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னு பஞ்சாயத்து ஒத்துக்கிட்டு அன்னமண்டியோட அப்புச்சி அவங்களை ஏத்துக்கிட்டா நான் செய்யுறேன் என சொல்ல, பஞ்சாயத்தார் சரி என சொல்கின்றனர்.

புவனா தாலியை கழட்டும் சமயத்தில் நிறுத்துங்க என குரல் கேக்க, அமுதா நின்று கொண்டிருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv