முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புவனா கழுத்தில் தாலி கட்டிய செல்வா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

புவனா கழுத்தில் தாலி கட்டிய செல்வா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

புவனா கழுத்தில் தாலி கட்டிய செல்வா, மண மேடையில் காத்திருந்த அதிர்ச்சி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மறுநாள் காலை மண்டபத்தில் செல்வாவுக்கு கல்யாண ஏற்பாடு நடைபெறுகிறது. அய்யர் மாப்பிள்ளைக்கு சடங்குகள் செய்து பொண்ணை அழைத்து சடங்குகள் செய்கிறார்.

அமுதா, புவனா அருகருகில் அமர்ந்திருக்க செல்வா தாலியை அக்காவிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு கட்டுகிறேன் என சொல்லியபடி மேடையில் இருந்து எழுகிறான். பழனியின் தங்கையும் பின்னால் மணக்கோலத்துடன் இறங்கி வர செல்வா தாலியை அமுதாவின் கையில் குடுத்து ஆசிர்வாதம் வாங்குகிறான்.

உமா, நாகு டென்ஷனாக பார்க்க செல்வா தாலியை வாங்கி பழனியின் தங்கை கழுத்தில் கட்டப் போகிறான். அப்போது செல்வா பால்கனியில் இருக்கும் நண்பர்களுக்கு கண் காட்ட நண்பர்கள் அனைவரும் மேலிருந்து பூக்களை கொட்டுகின்றனர்.

இதனால் அனைவரும் மேலே பார்த்தபடி இருக்க, செல்வா தாலியை செந்திலின் தங்கை புவனாவின் கழுத்தில் கட்டுகிறான். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறகு பழனி செல்வாவை அடிக்க மண்டபத்தில் தள்ளு முள்ளு நடக்கிறது. பழனியும் உமாவும் புவனாவின் தாலியை கழட்டி எறியச் சொல்ல குமரேசன் மேடைல ஏறுன என் பொண்ணு கீழே இறங்கவே கூடாது என சத்தமிடுகிறான்.

செல்வராஜ் புவனா,செல்வா இருவரையும் அழைத்து போய் ஒரு ரூமில் பூட்டுகிறான். அமுதா அங்கு வந்து செல்வாவிடம் நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை என கதறி அழ செல்வராஜ் அமுதாவிடம் நீ புவனா கழுத்துல இருந்து தாலியை கழட்டிரும்மா, யோசிக்காத என சொல்கிறான்.

அமுதா அவரிடம் அப்பா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க என கேக்க, என்னன்னு சொல்லும்மா என அவர் சொல்ல, அமுதா நீங்க வெளில போய் எதுவும் வாய திறக்காதீங்க, இந்த பாவமும் பழியும் என் மேலயே விழட்டும் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv