ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வடிவேலுவுக்கு மரண பயத்தை காட்டிய அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

வடிவேலுவுக்கு மரண பயத்தை காட்டிய அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

வடிவேலு, உமாவுக்கு மரண பயத்தை காட்டிய அமுதா அடுத்து நடக்கப்போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீர்யலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் ஆசிட் பட்டு செந்திலுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அமுதா அவனுக்கு சாப்பாடு ஊட்டுவது, குளிக்க வைப்பது என எல்லா உதவிகளையும் செய்கிறாள்.

அப்போது வடிவேலு அங்கு வர அமுதா அவனை பார்க்க, அவன் காலில் ஆசிட் பட்ட தடயம் இருக்க, வடிவேலு தான் இதை செய்திருப்பான் என உறுதி செய்கிறாள். வடிவேலு அமுதா தன்னை பார்க்கிறாள் என தெரிந்தவுடன் அங்கிருந்து நகர்கிறான்

அடுத்து வடிவேலு ரோட்டில் நடந்து கொண்டிருக்க, அமுதா கையில் பாட்டிலுடன் எதிரே வந்து நிற்க, வடிவேலு திடுக்கிட்டு நிற்கிறான். பிறகு அமுதாவின் கையில் வடிவேலு வாங்கிய அதே ஆசிட் பாட்டில் இருப்பதை பார்க்கிறான். அமுதா அவனிடம் நீ வாங்குன கடைல தான் நானும் ஆசிட் வாங்குனேன் இதை பண்ணது நீ தான்னு எனக்கு தெரியும், பொண்ணுன்னா நீ என்ன பண்ணுனாலும் பொறுத்துக்கிட்டே போவேன்னு நினைச்சியா, உன்னை திருப்பி அடிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது.

இனிமே எங்களை ஏதாவது பண்ணனும்னு நினைச்சே என சொல்லி பாட்டிலை திறந்து அவன் முகத்தில் ஊற்ற, வடிவேலு கீழே விழுந்து முகத்தை பிடித்தபடி அழுகிறான். சிறிது நேரம் கழித்து அது ஆசிட் இல்லை வெறும் தண்ணீர் தான் என சொல்லி வெறும் தண்ணிக்கே நீ இந்த பயம் பயப்படுற, இப்படி தான் நாட்டுல ஈவு இரக்கம் இல்லாம உன்னை மாதிரி ஆளுங்க பொண்ணுங்க மேல ஆசிட் ஊத்துறீங்களே அவங்களுக்கு எல்லாம் என்ன வலி வலிக்கும்னு என்னைக்காவது நினைச்சு பார்த்திருப்பீங்களா என பொங்குகிறாள்.

மேலும் நீ என் மேல ஆசிட் அடிக்கிறதுக்கு ஒரு தயக்கம் இருந்துச்சு.. உன் மனசுக்குள்ள இருக்குற ஈரத்தை யார் பேச்சையோ கேட்டு விட்டு கெடுத்துராத என சொல்ல வடிவேலு அதை கண்டுகொள்ளாமல் நகர்கிறான்.

பிறகு உமா காரில் இருந்து இறங்கியபடி கடைக்கு செல்ல எதிரே ஒருவன் துணியால் முகத்தை மூடியபடி ஆசிட் பாட்டிலுடன் நிற்க உமா பயப்படுகிறாள். அவன் அவளிடம் நீங்க ஊத்த சொன்ன ஆளுக்கு ஊத்திட்டு மிச்சம் இருந்துச்சு அதான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன் என பாட்டிலை தூக்கி எறிய, உமா அதிர்ச்சி ஆகிறாள்.

உமா அதிர்ச்சியுடன் நிற்க, அமுதா எதிரே வந்து, என்ன பயந்துட்டியா, நீ இவ்வளவு கீழ்த்தரமா போவேன்னு நான் நினைக்கவே இல்லை.. எப்ப பார்த்தாலும் என் குடும்பத்தை சீரழிக்கலாம்னு நினைக்கிறியே, உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குல்ல, அதைப் போய் பாரு அமுதா என் மாமா இறந்தததுக்கு பின்னாடி ஏதோ ஒண்ணு உன் மாமாவும் உன் புருஷனும் பண்ணிருக்காங்க அது எனக்கு தெரியும்.. என்னை இனிமே நோண்டாதீங்க, நான் திருப்பி நீங்க என் மாமாவுக்கு பண்ணுனதை எல்லாம் கிளறுனேன், இப்ப அனுபவிச்சிகிட்டிருக்க சொத்து பத்து எல்லாம் போயிரும் என மிரட்டுகிறாள்.

உன் புருஷன் என் கடையை எரிச்சான், அதுக்காக நான் அடிச்சேன், அதுக்காக என் மேல ஆசிட் ஊத்தலாம்னு பிளான் பண்றீங்களா, இனிமே இப்படி ஏதாவது செய்யனும்னு நினைச்சீங்க, அமுதாவோட வேற ஒரு முகத்தை பார்ப்ப என எச்சரித்து விட்டு செல்கிறாள்.

பின்னர் இரவு செந்தில் வலி தாங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்க, அன்னலட்சுமி யாரும் பார்க்கிறார்களா என பார்த்தபடி மருந்து எடுத்து அவனுக்கு காயத்தில் தடவி விடுகிறாள். மாணிக்கம் இதை பார்த்து விட்டு நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன், நீ அவன் கிட்ட கோபமாக இருக்கிற மாதிரியே நடிச்சுக்கோ என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... கோயிலா, பள்ளிக் கூடமா? - ஆத்திகமும், நாத்திகமும் மோதிக் கொண்ட மனிதனும் தெய்வமாகலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv