ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுதாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

பற்றி எரிந்த கடை, விடிந்ததும் அமுதாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி அடுத்து நடந்தது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க அனைவரும் போராடிக் கொண்டிருக்க அன்னலட்சுமி வருந்தி அழுது துடிக்கிறாள்.

மறுநாள் காலை வடிவேலு, சுமதி, பரமு, சின்னா கடை எரிந்து போனதற்கு அமுதா தான் இதற்கு காரணம் என தப்பாக பேச

செல்வா விஷயம் கேள்விபட்டு கடைக்கு வருகிறான். அமுதா கண்ணீருடன் செல்வாவிடம் ஜான் ஏறுனா முழம் சறுக்குது என சொல்லி வருந்த, செல்வா அமுதாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கடை வீதியில் அனைவரிடமும் இந்த கடைல என்னோட முதல் இருக்கு. இந்த, கடைக்கு ஏற்பட்ட நஷ்டம் எனக்கு ஏற்படுத்துற நஷ்டம் என பேசுகிறான்.

அதோடு கடைக்கு தீ வைச்சது யாரோ அவங்க காலைலக்குள்ள கடையை ரெடி பண்ணிடுங்க.. நான் காலைல வருவேன் கடை ரெடியாகலனா, யாரு தீ வைச்சாங்களோ அவங்க தலையை சீவிருவேன் என ஆத்திரப்படுகிறான்.

அடுத்து வீட்டில் அனைவரும் சோகமாக இருக்க அமுதாவுக்கு செந்தில் ஆறுதல் சொல்கிறான். வீட்டில் அனைவரும் வருத்தத்துடன் இருக்க, மீண்டும் செல்வா வந்து அமுதாவை அழைத்துக் கொண்டு கிளம்ப அவர்களுடன் அன்னம், மாணிக்கம் உடன் வருகின்றனர்.

அமுதா, செல்வம் வந்து இறங்க, கடை புதியதாக ரெடி ஆகி இருப்பதை பார்த்து அமுதா செல்வாவுக்கு கண்ணீருடன் நன்றி சொல்கிறாள். பின்னர் அன்னம் கடையில் அமர்ந்திருக்கும் அழகை பார்த்து அமுதா ரசிக்க அப்போது தற்செயலாக எதிரில் சிசிடிவி இருப்பதை கவனிக்கிறாள் அமுதா. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த துணிவு படக்குழு... என்ன தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv