ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுதா சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான மாணிக்கம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதா சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான மாணிக்கம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதா சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான மாணிக்கம், காத்திருந்த ட்விஸ்ட் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் அமுதா கடையை புதிதாக தயார் செய்ய மாணிக்கம் அவருக்கு உதவுகிறார்.

அடுத்து கல்லாவில் உட்காருவதற்காக சேரை மாணிக்கம் கொண்டு வந்து போட அமுதா உட்கார்ந்து பார்த்து விட்டு சித்தப்பா நல்ல சேரா பார்த்து வாங்க மாட்டீங்களா, இதுல உக்கார்ந்தா முதுகு வலிக்கும், வேற ஒண்ணு நான் சொல்ற மாதிரி வாங்கிட்டு வாங்க என சொல்ல, அமுதா பேசியதை நினைத்து மாணிக்கம் வருத்தமாகிறார்.

அடுத்து பரமு, சின்னா மாணிக்கத்திடம் பார்த்தீங்களா மாமா அவ உட்கார போற சேரை அப்படி இப்படி இருக்கனும் சொல்றா, அவ முதலாளி உட்கார்ந்து கிட்டு நம்மளை வேலை வாங்க போறா, எனக்கென்னமோ இது அம்மா கடையா இருக்காது, அமுதா கடையா தான் இருக்க போகுது.. இனிமே அவளோட ராஜ்ஜியம், நாம எல்லாம் பூஜ்ஜியம் என ஏற்றி விடுகின்றனர்.

பிறகு மாணிக்கம் அன்னத்திடம் கடையில் நடந்தவற்றை சொல்ல அன்னம் அவ சொல்றான்னு நீயும் அதை கேட்டுகிட்டிருக்க இதைப் பற்றி இனிமேல் பேச வேண்டாம் என சொல்லி விடுகிறாள்.

அடுத்ததாக கடை திறப்பு விழா நடைபெறுகிறது. கல்லா சேரில் யார் அமரப் போகிறார்கள் என்கிற பில்டப் எகிற அமுதா, அன்னலட்சுமியை அழைத்து கல்லா சேரில் அமர வைக்க அன்னம் நெகிழ்ச்சி அடைகிறாள். மாணிக்கம் புரியாமல் பார்க்கிறார்.

அதன் பிறகு மாணிக்கம் அமுதாவிடம் உன் எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்துவிட்டேன் என மன்னிப்பு கேட்க அமுதா அவரிடம் நீங்க என் சின்ன தகப்பன், என்னை நீங்க சந்தேகப்பட்டீக குத்திபுடுவேன் என செல்லமாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... தெலுங்கின் முதல் 'ஏ' சான்றிதழ் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயலலிதா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv