ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடனால் பறிபோன கடையை மீட்டெடுக்கும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

கடனால் பறிபோன கடையை மீட்டெடுக்கும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

கடனால் பறிபோன கடையை மீட்டெடுக்கும் அமுதா, சவால் விடும் வடிவேலு அடுத்து நடக்கப்போவது என்ன எனஅமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். வடிவேலு கடை பிரச்சனை வீட்டில் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் மாணிக்கத்தை வடிவேலு திட்ட, அமுதா வடிவேலுவை தண்ட சோறு என திட்டுகிறாள். இதனால் ஆத்திரமடையும் சுமதி அவர் வாங்கிய கடன் தொகையை தனது அப்பா தருவதாக சொல்கிறாள்‌.

உடனே சுமதி செல்வாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல செல்வா பணத்துடன் செந்தில் வீட்டிற்கு வருகிறான். செல்வா பணத்தை கொடுத்து விட்டு இந்த பணத்திற்கு அமுதாவை கேரண்டி தர சொல்ல, அமுதா சம்மதம் சொல்லிவிட்டு வடிவேலு இனிமேல் கடை பக்கம் வரக் கூடாது என கறாராக சொல்கிறாள்.

அடுத்ததாக அமுதா பணத்துடன் குமரேசன் வீட்டிற்கு வந்து பணத்தை கொடுக்க பணத்தை எங்க புரட்டுனீங்க என குமரேசன் கேட்க எங்க புரட்டுனா என்ன பணத்தை குடுத்தாச்சு சாவியை குடுங்க என அமுதா கேட்டு பிறகு உமாவிடம் பணத்தை கொடுத்து விட்டு கடைசாவியை வாங்குகிறாள்.

குமரேசன் கடைக்கு பொருள் வேணும்னா நம்ம குடோன்ல இருந்து எடுத்துக்கலாம்ல என சொல்ல, பொருளை குடுத்துட்டு கடையை எடுத்துக்குற ஆளுங்க சகவாசம் எங்களுக்கு தேவை இல்லை என சொல்கிறாள்.

பிறகு வடிவேலு கடை சாவியை எடுக்க போக அமுதா அவனை சாவியை நீ தொடக் கூடாது என சண்டையிட வடிவேலு கோபத்துடன் நீ எப்படி கடைய நடத்துறேன்னு நானும் பார்க்குறேன் என சவால் விடுகிறான். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே - ஹேப்பி பர்த்டே நிக்கி கல்ராணி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv