ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அன்னலட்சுமி ரெஸ்ட்டாரண்டில் தீபாவை பார்த்தவள் அமுதாவிடம் இந்த பொண்ணு அன்னைக்கு வீட்டுக்கு வந்தாளே அவ தானே என கேக்க , அமுதா ஆமாம் என தலையாட்டுகிறாள்.
அடுத்து அவ எதுக்கு அந்த பைய என்னம்மா பேப்பரால மூஞ்சை மறைச்சிகிட்டே உட்கார்ந்திருக்கான் என கேட்க அப்போது டேபிளில் இருந்த டம்ளர் கீழே விழ அமுதா குனிந்து எடுக்கும் போது செந்திலின் செப்பலை பார்த்து சந்தேகப்பட்டு செந்தில் என தெரிந்து கொள்கிறாள். அடுத்து தீபா செந்திலை சாப்பிடுறா என சொல்ல, அவன் வேண்டாம் என சொல்ல, சாப்பிட முடியாதவன் எதுக்கு ஹோட்டலுக்கு வந்தானாம் என அன்னலட்சுமி திட்டுகிறாள். காலேஜ்ல படிக்கிற பையனா இருக்கும் அத்தை என சொல்ல, அன்னலட்சுமி படிக்கிற பையலை வாத்திச்சி இப்படியா கூட்டிட்டு வருவா என திட்டுகிறாள்.
அடுத்து அமுதா அன்னலட்சுமியிடம் படிக்கிறதுக்காக வந்திருப்பாங்க அத்தை என சொல்லி சமாளிக்க ஒரு கட்டத்தில் அன்னலட்சுமி அது செந்தில் என கண்டுபிடித்து விடுகிறாள். அன்னலட்சுமி செந்திலை திட்ட, அமுதா அத்தை விடுங்க அத்தை, அவுக பிரண்டு தான, கூப்ட உடனே வந்திருப்பாங்க, அவங்க படிச்சிட்டு வரட்டும் என அன்னலட்சுமியை சமாதானம் சொல்லி அழைத்து செல்கிறாள். செந்தில் நிம்மதி அடைகிறான்.
பிறகு வீட்டில் செந்தில் அமுதாவிடம் அம்மாவிடம் இருந்து தன்னை காப்பாற்றியதற்கு நன்றி சொல்கிறான். அமுதா அத்தனை பேருக்கு முன்னால உங்க மானம் போயிரக் கூடாதுன்னு வேண்டாம்னு சொன்னேன்.. புரொபசர் ஸ்டூடண்ட்டுன்னா அந்த மாதிரி நடக்கனும்.. அதை விட்டுப்புட்டு இன்னும் பிரண்டாவே இருந்தா எப்படி என சொல்ல செந்தில் ஷாக்காகிறான். அடுத்து சிதம்பரம் வீட்டில் செல்வாவிற்கு பழனி தங்கையுடன் நிச்சயதார்த்த ஏற்படுகள் நடைபெறுகிறது. அமுதா செந்திலுடன் காரில் வந்து இறங்க, நாகு, உமா இருவரும் உன்னை யாரு வரச் சொன்னது என கேட்டுக் கொண்டிருக்க, சிதம்பரம் வந்து நான் தான் அமுதாவை வரச் சொன்னேன் என சொல்லி அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.
பிறகு உமா சிதம்பரத்திடம் என் புருஷனை அடிச்சிருக்கா அவளைப் போய் கல்யாணத்துக்கு வரச் சொல்லிருக்கீங்க, இது கொஞ்சம் கூட நல்லா இல்ல என சொல்கிறாள். இந்த கல்யாணம் நடக்கனும்னா அவ இங்க இருக்க கூடாது என சொல்ல சிதம்பரம் இந்த கல்யாணம் வேண்டாம்னா கிளம்பு ஒண்ணும் பிரச்சனை இல்லை என சொல்ல, உமா, அமுதா என இருவரும் ஷாக் ஆகின்றனர். பிறகு நாகு நீங்க பண்றது நியாயமே இல்லை, நானும் கிளம்பிருவேன் என மிரட்ட, சிதம்பரம் உன்னை எல்லாம் எப்பவோ கிளம்ப சொல்லியாச்சி என கோபமாக சொல்ல பழனி நிலைமையை சமாளிக்கிறான். சிதம்பரம் குமரேசனிடம் என் வீட்டு சார்பா என் மூத்த மருமகனும், மகளும் தான் தட்டை மாத்திக்குவாங்க என சொல்கிறார்.
அமுதா செந்தில் நின்று கொண்டிருக்க, அமுதாவின் கண்ணை ஒரு கைகள் மூட, அமுதா யாரு யாரு என கேட்டபடி பொம்மி என சொல்ல, பொம்மி (நினைத்தாலே இனிக்கும்) எப்படி கண்டுபிடிச்ச என கேக்க, உன் கைல அதிரசம் வாசனை வருதே, இங்கயும் உன்னை அதிரசம் பண்ண வச்சுட்டாங்களா என கேட்கிறாள்.
சிதம்பரம் தனது மனைவியின் போட்டோ முன்பு நின்றபடி, உன் பிள்ளை திரும்ப இந்த வீட்டுக்கு வந்துட்டா, நான் அவளுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை குடுத்துட்டேன் இப்ப உனக்கு சந்தோஷமா என சொல்லிக் கொண்டிருக்க, எனக்கு சந்தோஷம் தான் என குரல் கேக்க, சிதம்பரம் திரும்பி பார்க்க பொம்மி வருகிறாள். பொம்மி அவரிடம் அமுதா திரும்ப வீட்டுக்கு வந்தது பற்றி சந்தோஷப்படுகிறாள் அமுதாவை ஏற்றுக் கொண்டது போல செந்திலையும் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv