முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உமாவிற்கு ராஜராஜேஸ்வரி கொடுத்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

உமாவிற்கு ராஜராஜேஸ்வரி கொடுத்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவுக்கு ஆப்பு வைக்க நினைத்த உமாவிற்கு ராஜராஜேஸ்வரி கொடுத்த அதிர்ச்சி அடுத்து நடக்கப்போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கடைக்காரர் கம்மலை எடுத்து வைத்தவர் ஒரு ஜோடி கம்மலை காணோம் என சொல்ல, கடை பரபரப்பாகிறது

பேக்கை செக் செய்து பார்க்க வேண்டும் என சொல்ல அனைவரும் டென்ஷனாக உமா அமுதா மாட்டுனா என நினத்துக் கொண்டிருக்க, கடைக்காரர்கள் ஒவ்வொரு பையாக செக் செய்கிறார்.

அடுத்து அமுதாவின் பேக்கை செக் செய்ய அதில் கம்மல் இருக்க உமா சிதம்பரத்திடம் அமுதா அவ புத்தியை காட்டிட்டா என சொல்கிறாள். அப்போது ராஜராஜேஸ்வரி அது என் பேக் என சொல்கிறாள்.

உடனே கடைக்காரர் சாரிம்மா அது உங்க பேக்கா என இந்தாங்க என குடுக்க, ராஜராஜேஸ்வரி அதை வாங்கியபடி பில் போடுகிறாள். பிறகு அமுதா ராஜராஜேஸ்வரியிடம் அம்மா என் பேக்குல தான் இருந்துச்சு, எதுக்காக என்னை காப்பாத்துனீங்க என கேட்க ராஜராஜேஸ்வரி நீ அதை எடுக்கலேன்னு எனக்கு தெரியும், அதை எடுத்துப் போட்டது அந்த பொண்ணு தான் என உமாவை கை காட்டுகிறாள்.

மேலும் இப்பவே சிசிடிவியை செக் பண்ணி அவளை உள்ள தள்ளனும் என சொல்ல, அமுதா வேண்டாம் அது தன் தங்கை என சொல்கிறாள். நல்லது நடக்குறப்ப இது தெரிஞ்சா குடும்பத்துக்கே அவமானமாயிரும் என சொல்ல, ராஜராஜேஸ்வரி உன் மனசு அவளுக்கு இல்லையம்மா என சொல்லி நெகிழ.. சிதம்பரத்திடம் இவ உங்க பொண்ணா இருக்காளேன்னு பெருமைப்படுங்க என சொல்கிறாள்.

அடுத்து ராஜராஜேஸ்வரி வெளியே வர உமா மறித்து நீங்க எதுக்கு அமுதாவை காப்பாத்தனும் என கேக்க, ராஜராஜேஸ்வரி அவளை கன்னத்தில் அறைந்து விட்டு, நான் அவளை காப்பாத்தல உன்னை தான் காப்பாத்திருக்கேன், சிசிசிடிவியை பார்த்திருந்தா நீ தான் மாட்டிருப்ப, உன்னை மாட்டி விடக் கூடாதுன்னு அவ நினைக்கிறா, அவளைப் பார்த்தாவது திருந்து என சொல்கிறாள்.

அடுத்து செந்திலிடம் தீபா போற வழில எனக்கு ஒரு வேலை இருக்கு, என் கூட வர்றியா, செந்தில் இல்ல அது, டேய் என்னடா ஓவரா பீலை குடுக்குற, நான் புரொபசர் எல்லாம் இல்ல , உன் பிரண்டு வா என சொல்ல இருவரும் வண்டியில் கிளம்புகின்றனர்.

தீபா செந்திலிடம் ரொம்ப பசிக்குது வா ஹோட்டல்ல சாப்பிட்டு போயிரலாம் என அவனை ஹோட்டலுக்கு அழைத்து வர செந்திலும் தீபாவும் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, மார்கெட்டுக்கு வந்த அமுதாவும் அன்னலட்சுமியும் அங்கே சாப்பிட வர, செந்தில் அவர்களை பார்த்ததும் பேப்பரை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறான்.

அன்னலட்சுமி தீபாவை பார்த்தவள் அமுதாவிடம் இந்த பொண்ணு அன்னைக்கு வீட்டுக்கு வந்தாளே அவ தானே என கேக்க , அமுதா ஆமாம் என தலையாட்ட, அவ எதுக்கு அந்த பைய என்னம்மா பேப்பரால மூஞ்சை மறைச்சிகிட்டே உட்கார்ந்திருக்கான் என கேக்க, செந்தில் நன்றாக பேப்பரை வைத்து தன் முகத்தை மறைத்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv