முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமுதாவுக்கு திருட்டு பட்டம் கட்ட நடக்கும் சதி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவுக்கு திருட்டு பட்டம் கட்ட நடக்கும் சதி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவுக்கு திருட்டு பட்டம் கட்ட நடக்கும் சதி, அடுத்து நடக்க போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வா புவனாவிடம் நீ என்னை காதலிக்கலையா? என கேட்க அமுதா அவளே உன்னை மறந்து போய் இருக்கா, நீ எதுக்கு இப்போ வந்து பேசுற? அப்புச்சியோட கவுரவத்தை காப்பாற்றுற வேலைய பாரு என சொல்கிறாள். அடுத்து சிதம்பரம் உமா இருவரும் நகை கடையில் வந்து நிற்க, உமா உள்ளே போகலாம் என சொல்ல சிதம்பரம் ஒரு நிமிஷம் இரு அமுதா வந்துரட்டும் என சொல்கிறார்.

அடுத்து அமுதா வந்து இறங்க, சிதம்பரம், நாகு, உமா கடைக்குள் செல்கின்றனர். அமுதா போன் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராஜராஜேஸ்வரி(பேரன்பு) காரில் வந்து இறங்குகிறாள்.

இறங்கும் போது ஒரு டப்பா கீழே விழ ராஜராஜேஸ்வரி அதை கவனிக்காமல் உள்ளே செல்கிறாள். அமுதா கவனித்து விட்டு டப்பாவை எடுத்து ராஜராஜேஸ்வரியிடம் குடுக்க இருவரும் அறிமுகம் ஆகின்றனர். அதன் பிறகு சிதம்பரம் அமுதாவிடம் உங்க அத்தைக்கு ஒரு நகை எடுத்துக்கம்மா, எப்பவும் அவங்களை அவமானப்படுத்தி தான் இருக்கேன், அதுக்கு பிராயசித்தமா நகையை எடுத்துக்கம்மா என சொல்கிறார்.

அடுத்து அமுதா சென்று அன்னலட்சுமிக்கு ஒரு செயினை பார்த்து எடுக்க, ராஜராஜேஸ்வரி தான் அதை செலக்ட் செய்திருப்பதாக சொல்ல, அமுதா அத்தைக்கு இந்த மாதிரி செயின் ரொம்ப பிடிக்கும் என சொல்ல, ராஜராஜேஸ்வரி நீயும் என் மருமக வானதி மாதிரி தான் என நெகிழ்கிறாள்.

பிறகு ராஜராஜேஸ்வரி கம்மல் எடுத்துக் கொண்டிருக்க, அமுதா நகையை பார்த்துக் கொண்டிருக்க, நாகுவும் உமாவும் அமுதா எப்படியோ அப்புச்சிகிட்ட ஒட்டிகிட்டா அதை விடவே கூடாது என சொல்ல, நாகு கம்மலை எடுத்து அமுதாவின் பேக்கில் போட்டு திருட்டு பட்டம் கட்டி விடலாம் என ஐடியா குடுக்க, உமா கம்மலை எடுத்து அமுதாவின் பேக்கில் போடுகிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv