முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செல்வா திருமணத்தில் அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செல்வா திருமணத்தில் அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

சிதம்பரத்துக்கு செல்வா கொடுத்த அதிர்ச்சி, அமுதா எடுத்த முடிவு என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிதம்பரம் செல்வாவிடம் உங்க அக்கா இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்தி வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு சொல்லிட்டா என சொல்ல, மார்க் அவனிடம் அப்பா சொல்வதை கேள் என சொல்ல, செல்வா அவரிடம் உங்க பசங்களே நீங்க சொல்றதை கேக்க மாட்டாங்குற என சொல்கிறான்‌.

அடுத்து செல்வா சிதம்பரத்திடம் நான் யார் சொன்னாலும் கேக்க மாட்டேன், புவனாவை கட்டியே தீருவேன் என சொல்ல அவனை பளார் என மார்க் அறைகிறார். அப்பா கவுரத்தோட நீங்க ஆசைப்பட்டது தான் முக்கியமா? அந்த பொண்ணே உங்க அக்கா வாழ்க்கை நல்லா இருக்கனுங்குறதுக்காக அவளே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா அவ உன் அக்கா தான அவ நல்லா இருக்கனும்னு நீ நினைக்காம சுயநலமா ஏண்டா சிந்திக்கிற, நீயும் என் பிள்ளைங்க மாதிரி சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சிட்டியடா, உங்க அப்பா சொல்றதை கேட்டு நடந்துக்க என மார்க் அறிவுரை கூறுகிறார்.

மேலும் எனக்கு தெரிஞ்சு உன் குடும்பத்துலயே நல்ல பொண்ணு அமுதாதான்னு நினைக்கிறேன் , உன் பையன் பேசுறதை பார்த்தியா, பார்த்து நடந்துக்கோ, என் குடும்பத்துல ஆயிரம் பிரச்சனை நான் சொல்றதுக்கு தகுதி இல்ல தான், இருந்தாலும் ஒரு நண்பனா இதை சொல்லலாம்னு தோணுச்சு அதான் சொன்னேன், நான் வர்றேன் சிதம்பரம் என மார்க் அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு அமுதா புவனாவிடம் எல்லாத்தையும் விட்டு குடுத்துட்டியே உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே என கேக்க, புவனா ஒன்றுமில்லை என சொல்கிறாள்‌. அடுத்து சிதம்பரம் காரில் வரும் போது அமுதா புவனாவை பார்க்கிறார்.

அப்போது செல்வா வர உமா சிதம்பரத்திடம் அப்புச்சி உங்க கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டு செல்வாவை வரவைச்சு ஏதோ திட்டம் போடுறாங்க என சொல்கிறாள். செல்வா புவனாவிடம் நீ என்னை விரும்புறேல்ல, அப்புறம் ஏன் வேண்டாம்னு சொன்ன என கேட்கிறான்.

அடுத்து அமுதா செல்வாவிடம், அவளே உன்னை வேண்டாம்னு சொல்லி மறந்து போய் இருக்கா, நீ எதுக்கு தேவை இல்லாம பிரச்சனை பண்ற, அது மட்டுமில்லாம அப்புச்சிக்கு நான் வாக்கு குடுத்திருக்கேன், அப்புச்சியோட கவுரம் கெட்டுப் போறமாதிரி நடந்துக்காத, இனிமே புவனாவை பார்க்க வராத என சொல்கிறாள்.

அதை கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் பார்த்தியா அமுதாவை, என்னைக்குமே அவ என் மக தான்,அவளைப் போய் தப்பா சொல்ற என உமாவிடம் சொல்ல, உமாவின் முகம் மாறுகிறது.

இதனை தொடர்ந்து மார்க் செந்தில் வீட்டிற்கு வந்து அமுதாவிடம் சிதம்பரம் வீட்டில் நடந்ததை எடுத்து சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv