முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அன்னம் குடும்பத்தினர் காலில் விழுந்த சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அன்னம் குடும்பத்தினர் காலில் விழுந்த சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அன்னம் குடும்பத்தினர் காலில் விழுந்த சிதம்பரம், அமுதா செய்த சத்தியம் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிதம்பரம் செல்வா சொல்லியதை நினைத்தபடி மயங்கி விழப் போக தவமாய் தவமிருந்து மார்க் அவரை தாங்கி பிடிக்கிறார். இருவரும் நண்பர்கள் என தெரிய வருகிறது.

மறுபக்கம் அன்னம் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு வர வடிவேலு, சின்னா, பரமு என மூவரும் நாங்க தான் முதல்லயே சொன்னோம்ல, அந்த ஆளு அசிங்கப்படுத்தி அனுப்புனானா, சொல்ல சொல்ல கேட்டீங்களா, அந்த ஆளு நம்மளை மதிக்க மாட்டான்னு தெரிஞ்சும் சம்மந்தம் பேச போனீங்களா?.. பண்ண ஒரு சம்மந்தத்துக்கே சும்மா கிழியுது என நக்கலாக சொல்ல, அமுதா நான் எங்க அப்புச்சி கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நடத்துறேன் என சொல்கிறாள்.

அடுத்து மார்க் சிதம்பரத்திடம் அமுதா சின்ன வயசுல பொறுப்பை எடுத்து நடத்துனவ அவ தான் உன் மனைவி இறந்ததுக்கப்புறம் உங்க எல்லாத்தையும் பார்த்துகிட்டா, சின்ன வயசுலயே பொறுப்பா இருந்தவங்க, காலகாலத்துக்கும் தப்பா இருக்க மாட்டாங்க இங்க வந்து வேண்டுறதை விட கவுரவம் பார்க்காம உன் மகளை போய் கேட்டுப் பாரு, அவளே இந்த கல்யாணத்தை நடத்துறதுக்கு நல்லதா ஒரு வழி சொல்லுவா என சொல்ல சிதம்பரம் யோசிக்கிறார்.

அடுத்து சிதம்பரம் முதன் முறையாக அமுதா கல்யாணத்திற்கு பின்பு செந்தில் வீட்டிற்கு வருகிறார். அனைவரும் பரபரப்பாக பார்க்க சிதம்பரம் வீட்டிற்கு வெளியே நிற்கிறார். அனைவரும் அவரை உள்ளே அழைக்க சின்னா, பரமு என இருவரும் அந்த ஆளு மனசு மாறிட்டான் போல என சொல்கின்றனர்.

சிதம்பரம் அனைவரிடமும் என் பொண்ணு இந்த வீட்டுக்கு வந்த பிறகு உங்க கிட்ட எதுவுமே நான் கேட்டதில்லை.. முதன் முறையா நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்குறேன் என் பையனுக்கு குமரேசன் பொண்ணை கட்டி குடுக்குறதா வாக்கு குடுத்துட்டேன் என சொல்லி அனைவரின் காலில் விழுகிறார். புவனா அமுதாவிடம் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அண்ணமண்டி என சொல்லியபடி அழுகிறாள்.

மேலும் சிதம்பரம் அமுதாவிடம் சத்தியம் செய்து குடுக்க சொல்ல, அமுதா தயங்கியபடியே சத்தியம் செய்து கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv