ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, அமுதா எழுந்து தண்ணீர் குடிக்க சென்றவள் தற்செயலாக புவனாவை பார்க்க, புவனா தூக்க மாத்திரையை சாப்பிட போக அமுதா அவளை அடிக்கிறாள்.
பிறகு புவனா அவளிடம் உங்களை நம்பி தான் நான் செல்வாவை லவ் பண்ணுனேன் என சொல்ல, அமுதா உன் கல்யாணத்தை நடத்த வேண்டியது என் பொறுப்பு.. நாளைக்கு எங்க அப்புச்சிகிட்ட போய் பேசுறோம் என சொல்ல புவனா சந்தோஷம் அடைகிறாள்.
பிறகு அமுதா, அன்னம், செந்தில், மாணிக்கம் என நால்வரும் சிதம்பரம் வீட்டிற்கு கிளம்ப, சின்னா அத்தை நீங்க மாப்பிள்ளை கேக்க போனீங்கன்னா அசிங்கப்படுத்தி அனுப்புவாரு அந்த ஆளு, எதுக்கு அந்த ஆளு கிட்ட போய் அவமானப்படப் போறீக வேண்டாம் சொன்னா கேளுங்க என சொல்கிறான்.
அமுதாவும் அன்னமும் நாங்க பார்த்துக்குறோம் என சொல்லிவிட்டு கிளம்ப, சின்னா போய் அவமானப்பட்ட பிறகு என்னத்தை பார்க்குறது என நக்கலாக சொல்கிறான். பிறகு அமுதா தன் குடும்பத்தாருடன் செல்வாவை மாப்பிள்ளை கேக்க சிதம்பரம் வீட்டிற்கு வருகிறார்.
வீட்டுக்கு வந்த சிதம்பரம் இந்த குடும்பத்தை யாரு கூப்பிட்டது என திட்ட நல்ல விஷயம் நடக்குறதை கேள்விப்பட்டு வந்திருப்பாங்க என குமரேசன் சொல்கிறான். இளங்கோ நல்ல விஷயம் நடக்க போதுன்னு நான் தான் கூப்பிட்டேன் என சொல்ல அன்னம், அமுதா புரியாமல் பார்க்க, உமா அமுதாவிடம் என் நாத்தனாருக்கு செல்வாவை நிச்சயம் பேச வந்திருக்கோம் என சொல்ல அன்னம், செந்தில், அமுதா, மாணிக்கம் என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அமுதாவிடம் அன்னலட்சுமி இனிமே புவனாவுக்கு மாப்பிள்ளை கேக்குறது நல்லா இருக்காதும்மா, இதுக்கப்புறம் உங்க அப்புச்சி இதுக்கு சம்மதிப்பாருன்னு எனக்கு நம்பிக்கை இல்லை என சொல்லிக் கொண்டிருக்க, உமா நுழைகிறாள். என்ன மாமியாரும் மருமகளும் எப்படி மாப்பிள்ளை கேக்குறதுன்னு யோசிக்கிறீங்களா என சொல்ல, அமுதா அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு உமா எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறியா என கேக்க அமுதா பார்க்க, FLASH CUT உமா தானும் பழனியும் செல்வா-புவனாவை பார்த்ததை சொல்கிறாள்.
உமா சொத்தை ஆட்டைய போடுறதுக்கு உன் நாத்தனாரை செல்வா கூட கோர்த்து விடுறியா, அது நடக்காது.. உன் திட்டத்துக்கு முன்னால என் திட்டத்தை நிறைவேத்திரனும்னு தான் இந்த நிச்சயதார்த்தம் என சொல்கிறாள்.
அமுதா தனியா நின்று கொண்டிருக்க உமா அமுதாவிடம் உனக்காக நான் வேணா என் நாத்தனாரை நிச்சயத்தை நிறுத்திடுறேன், நீ நான் என்ன கேட்டாலும் செய்வியா என கேட்க அமுதா அவளிடம் நீ என்ன கேட்டாலும் செய்யுறேன் என சொல்ல, உமா என் கால்ல விழுந்து கெஞ்சு என சொல்ல,அமுதா உமாவின் காலில் விழுகிறாள்.
உமா சிரித்தபடியே நீ கால்ல விழுந்துட்டா நான் செஞ்சிருவேன்னு நினைச்சியா என திமிராக பேசுகிறாள். நீ என்ன பண்ணுனாலும் நான் விட்டுக் குடுக்க மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv