முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செந்திலை கட்டிப்பிடித்த தீபா.. கடுப்பான அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செந்திலை கட்டிப்பிடித்த தீபா.. கடுப்பான அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

செந்திலை கட்டிப்பிடித்த தீபா, அமுதா எடுத்த முடிவு அடுத்து நடக்கப்போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் அமுதாவிடம் இப்ப தான் நான் பாஸ் பண்ணிட்டேன்ல்ல என அவள் அருகில் நெருங்கி வர, அமுதா கையை வைத்து தடுத்தபடி முத்தம் நான் தான் தர்றதா சொன்னேன், உங்களை குடுக்க சொல்லலை என சொல்ல, செந்தில் அப்ப நீ குடு என குழைய, அமுதா நான் தர்றேன்னு சொன்னேன், எப்பன்னு சொல்லவே இல்லையே என சொல்லிவிட்டு நகர்கிறாள். செந்தில் ஏக்கத்துடன் பார்க்கிறான்.

பிறகு செந்திலின் வீட்டிற்கு வரும் தீபா செந்திலை கட்டிப் பிடிக்கிறாள். இதனால் அமுதா அதிர்ச்சியாக பார்க்க, செந்தில் தன் கூடப் படித்தவள் என அறிமுகப்படுத்துகிறான். நேற்று தான் காலேஜில் லெக்சரராக ஜாயின் பண்ணியதாகவும், உன்னை பத்தி எல்லாரும் சொன்னானங்க, ஏதோ வசூல்ராஜா எம்பிபிஎஸ் மாதிரி எக்சாம்ல பாஸ் பண்ணிட்டியாமே, நீ படிக்கிற காலத்துலயே சரியா படிக்கமாட்டியே என சொல்ல செந்தில் தர்மசங்கடமாக நெளிகிறான்.

மேலும் காலேஜ் படிக்கிறப்ப நான் ரூட்டு விட்டுகிட்டிருந்தேன், ஜஸ்ட் மிஸ் ஆயிட்டான் என சொல்ல அமுதா முகம் மாறுகிறது. அடுத்து அமுதா மாணிக்கத்திடம் யாரு சித்தப்பா அவுக என விசாரித்துக் கொண்டிருக்க, செந்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறான். அப்போது அமுதா வந்த உடனே அவுகளை கட்டி எல்லாம் பிடிக்கிறாக என சொல்ல, மாணிக்கம் திரும்பி செந்திலை பார்க்க, செந்தில் பில்டப்பை ஏத்து என கண்ணை காட்டுகிறான்.

பிறகு மாணிக்கம் அமுதாவிடம் காலேஜ் படிக்கும் போது இவன் மேல ஒன் சைட் லவ் பண்ணிருக்கா.. இப்ப அவளே அவனுக்கு கிளாசுக்கு வாத்தியாச்சு வந்திருக்கா, நம்ம ஆளை ஸ்பெஷலா கவனிப்பா போல இருக்கு பார்த்துக்கம்மா, எல்லாம் உன் கைல தான் இருக்கு என சொல்ல அமுதா என் கைலயா என கேக்க, ஆமம்மா நீ தான் அவனை எப்ப பார்த்தாலும் முறைச்சிகிட்டே திரியுற, பயலுக எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டானுங்க, நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ என சொல்ல அமுதா யோசிக்கிறாள்‌.

அதன் பிறகு அமுதா மாணிக்கம் சொன்னதை நினைத்துப் பார்க்க அமுதாவின் இமேஜினேசனில் செந்தில் தீபா கன்னத்தை பிடித்து கிள்ளுவது, இருவரும் சிரித்துப் பேசுவது போன்று நினைவுக்கு வர. அமுதா எழுந்து உள்ளே செல்கிறாள்.

அப்போது செந்தில் கிளம்பிக் கொண்டிருக்க, அமுதா புத்தகத்துடன் நிற்கிறாள். அமுதா அவனிடம் நீங்க வாத்தியார் தான எனக்கு கொஞ்சம் பாடம் சொல்லிக் குடுங்க என சொல்ல மாணிக்கம் பார்த்து விட்டு நடத்தும்மா உன் நாடகத்தை என மனதிற்குள் சொல்லியபடி சிரித்துக் கொள்கிறார். பிறகு அமுதா செந்திலிடம் தனக்கு சரியா எழுத வராது, கையை பிடிச்சி எழுதச் சொல்லிக் குடுங்க என சொல்ல, செந்தில் சந்தோஷப்படுகிறான்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv