ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குலதெய்வ கோவிலில் பழனி கொடுத்த ஷாக் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

குலதெய்வ கோவிலில் பழனி கொடுத்த ஷாக் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

குலதெய்வ கோவிலில் பழனி கொடுத்த ஷாக், சிதம்பரத்துக்கு பிபி ஏத்திய அமுதா என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். குல தெய்வ கோவிலி அருள் வந்து சாமியாடும் பழனி நேராக சென்று அமுதாவிடம் புடவையை கொடுக்க, உமா புரியாமல் பார்க்கிறாள்‌. அடுத்து பழனி சிதம்பரத்திடம் அவளுக்கு என்னை கும்பிட வர்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு, அதை நீ தடுக்க கூடாது என திருநீறை பூசிவிட்டு என்னைக்கும் அவ என் பிள்ளை, அவ போன புகுந்த வீடும் என் குடும்பம் என சொல்லிவிட்டு மயங்கி விழுகிறான்.

பழனி மயக்கம் தெளிய, உமா என்னங்க இப்படி பண்ணிட்டீங்க என சொல்ல, பழனி தனக்கு நடந்தது எதுவும் நினைவில்லை, எனக்கு உண்மையிலயே அருள் வந்துவிட்டதாக சொல்ல உமா ஷாக்காகிறாள்.

அடுத்து சைக்கிள் போட்டிக்கான முதல் பரிசு 50,000 என சொல்ல, செந்தில் காலேஜ் பீஸ் கட்டுவதற்காக தான் கலந்து கொள்வதாக சொல்ல, பழனியும் உமாவும் பிளான் செய்து ஊர்க்காரர் ஒருவரிடம் அவனை கலந்துக் கொள்ள கூடாது என சொல்கிறார்.

அடுத்து ஊர்க்காரர் யப்பா என்ன இருந்தாலும் நீ மருமகன் தான் இந்த குடும்பத்து ஆள் கிடையாது.  ஆதலால் கலந்து கொள்ளக் கூடாது என சொல்ல, அமுதா நான் இந்த குடும்பத்து ஆள் தான், நான் கலந்துக்கலாம்ல என கேட்டு விட்டு போட்டியில் கலந்து கொள்ள அனைவரும் டென்ஷனாக சிதம்பரம் கடுப்பாகிறார்.

Also read... மீண்டும் தொடங்கியது கமலின் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்!

அடுத்து விறுவிறுப்பான சைக்கிள் போட்டி நடக்க எப்பவும் ஜெயிக்கிற ஆள அமுதா எப்படி தோக்கடிக்கும் என பேசுகின்றனர். கலந்து கொண்ட மற்ற ஆண்கள் ஒவ்வொருவராக போட்டியில் தோற்க அமுதாவும் மாரிமுத்துவும் போட்டியில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் ஜெயிக்கப் போவது யார் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv