ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அன்னத்திற்கு பூவையும் பொட்டையும் வைத்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அன்னத்திற்கு பூவையும் பொட்டையும் வைத்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அன்னத்திற்கு பூவையும் பொட்டையும் வைத்த அமுதா, ஷாக்கான குடும்பம் அடுத்து நடக்க போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் நாகு, கோமதி அன்னத்தை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்ப அமுதா அன்னத்தை நிற்க சொல்கிறாள்.

அடுத்து எங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் அவங்க சாமி..பொண்டாட்டியை இழந்த புருஷனை யாரும் அபசகுணமா பார்க்குறதுல்ல, அது என்ன பொம்பளைகளுக்கு மட்டும்.. எங்க அத்தை முன்னால தான் இது நடக்கணும்.. கல்யாணம் ஆகாத எத்தனையோ கன்னிச் சாமிக்கு முன்னாடி தான் குடும்பத்தோட கும்பிடுறோம் என சொல்கிறாள்.

அடுத்து கோமதி தாலி பிரிச்சி கோக்குற பொண்ணுங்களுக்கு பூவும் பொட்டும் நிலைக்கனும்னு தான் இதை பண்றோம் அது நடக்குறப்போ அது இல்லாம இருக்குறவங்க இருக்க கூடாது என சொல்ல அமுதா கோமதியிடம் பூவும் பொட்டும் தான வேணும், நீங்க வாங்க அத்தை என அவளை இழுத்து செல்கிறாள்.

கூட்டி சென்றதும் அமுதா அன்னத்திற்கு பூவும், பொட்டும் வைத்து விட அன்னம், மாணிக்கம், செந்தில் நெகிழ்ச்சி அடைகிறார்கள். மற்றவர்கள் ஷாக்காகிறார்கள். பிறகு அமுதா அன்னத்தை மீண்டும் அழைத்து வர அனைவரும் அமுதாவை சத்தம் போடுகின்றனர்.

அனைவரும் அமுதாவை வசைபாட அமுதா அனைவரிடமும் இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க, எங்க அத்தையை பூவும் பொட்டும் வைக்க நான் என்னைக்கோ சொல்லிருப்பேன். அவங்களுக்கு அதுல விருப்பம் இல்லேன்னு தான் நான் இதுவரைக்கும் அவங்க கிட்ட பூவும் பொட்டும் வைக்க சொல்லலை, ஆனா இன்னைக்கு சபைல இது ஒரு கேள்வின்னு வர்றப்ப நான் பதில் சொல்லித்தான் ஆகனும் என சொல்கிறாள்.

தொடர்ந்து பொண்ணுங்குறவ அவ நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து பூவும் பொட்டும் வச்சு தான் வளர்றா.. புருஷன்னு ஒருத்தன் வரும் போது அந்த பொண்ணுக்கு அவன் கட்டுறது தாலி மட்டும் தான். புருஷன் போன பிறகு அவன் ஞாபகமா இருந்த தாலியை கழட்ட சொல்றீங்க, அது ஒரு நியாயம் இருக்கு.. ஆனா அவ புருஷன் வர்றதுக்கு முன்னாடியே அவ வச்சுகிட்ட பூவையும் பொட்டையும் வைக்க கூடாதுன்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது என வாதாடுகிறாள்.

Also read... வழிப்பறி கொள்ளையர்களால் நடு ரோட்டில் நடிகை சுட்டுக் கொலை

அடுத்து செல்வாவின் அம்மா அமுதாவை நோக்கி வந்து அமுதாவின் முகத்தை தடவி கொடுத்தபடி சரியா சொன்ன ஆத்தா, நீ சொன்னது தான் சரி. புருஷன் கட்டுன தாலியை கழட்டுனது சரி, எங்க கிட்ட இருந்து பூவையும் பொட்டையும் பறிக்கிறதுக்கு யாருடா உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என சொல்லி அமுதாவை பாரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv