ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சங்கிலியை அசிங்கப்படுத்திய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சங்கிலியை அசிங்கப்படுத்திய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

கையில் தாலியுடன் நிற்கும் வெற்றி, சங்கிலியை அசிங்கப்படுத்திய மீனாட்சி, அடுத்து நடந்தது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் யமுனா தாலியை வெற்றியின் கையில் கொடுத்து சக்தியின் கழுத்தில் கட்ட சொல்லி வற்புறுத்துகிறாள்.

அப்பொழுது அங்கு வரும் துர்கா பதட்டத்துடன் மீனாட்சி அம்மா கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நீங்கள் வராவிட்டால் கொளுத்திக் கொள்வேன் என்று உட்கார்ந்து இருப்பதாகவும் சங்கிலி சக்தி வீட்டை விட்டு ஓடி விட்டாள் என்று குற்றம் சாட்டியதாகவும் சொல்கிறாள். உடனே மூவரும் ஆட்டோவில் கிளம்பி வீட்டிற்கு வந்து இறங்குகின்றனர்.

அடுத்து சக்தி மீனாட்சியிடம் காய்கறி நறுக்கும் பொழுது யமுனாவின் கையில் கத்தி அறுத்து விட்டதால் ஆஸ்பத்திரிக்கு சென்றதாக சொல்ல மீனாட்சி புஷ்பாவிடம் கோபமாக என்ன சூழ்நிலை என்றே தெரியாமல் சக்தியை பற்றி அவதூறாக பேசியதாக திட்டுகிறாள். சங்கிலியையும் திட்டி அவமானப்படுத்தி அனுப்புகிறாள்.

இதனால் அப்செட்டாக வரும் சங்கிலியை சந்திக்கும் திடியன், கிரி இருவரும் மீனாட்சி வீட்டில் நடந்த அனைத்தும் நாடகம் என்று சங்கிலியை குழப்பி விடுகின்றனர். அடுத்து நீதிமணி, புஷ்பா இருவரும் சங்கிலியை வழியில் சந்தித்து விசாரிக்க சக்தி கெட்டுப் போய்விட்டதாக சங்கிலி சொல்கிறான்.

Also read... பைக்கில் தென்காசிக்கு வந்த 'துணிவு' அஜித் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

இந்த கல்யாணம் நடக்காவிட்டால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என்று புஷ்பா சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? யார் யாருடன் ஜோடி சேர போகிறார்கள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv