ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நக்கலாக பேசிய உமாவை அறைந்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

நக்கலாக பேசிய உமாவை அறைந்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

உமாவை அறைந்த அமுதா, வடிவேலுவால் காத்திருக்கும் அதிர்ச்சி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் தாலி வேண்டாம் என அன்னலட்சுமி அழ, இது மாமாவின் ஆசிர்வாதம் என அமுதா சொல்ல, அன்னலட்சுமி நெகிழ்ச்சி அடைகிறாள். அடுத்து இருவருக்கும் இடையில் உணர்சி பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதன் பிறகு வீடு வரும் பழனி-உமா தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை மண்டபத்தில் வைக்கலாம் என சொல்ல, அமுதா பார்க்க, உமா இங்க வைக்கனும்னா அப்புச்சி வர மாட்டாரு, நம்ம வீட்டுல வைக்கனும்னா நீ நம்ம வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாதுன்னு அப்புச்சி சொல்லிருக்காரு.. அதான் பொதுவா மண்டபத்துல வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம் என சொல்லி அழைக்கிறாள்.

அடுத்து உமா அமுதாவிடம் அப்புச்சியை நாங்க எங்க வீட்டு சார்பா கூப்பிட்டுட்டோம், நீ உங்க வீட்டு சார்பா போய் கூப்பிடு என சொல்ல அமுதா கண்ணீருடனும் ஏக்கத்துடன் பார்க்க அன்னலட்சுமி வர சம்மதம் சொல்கிறாள். பின்னர் அமுதா அன்னத்திடம் நீங்கள் வேண்டாம் என சொல்வீர்கள் என நினைத்தேன் என சொல்ல, உன் கண்ணுல பொறந்த வீடு ஆசை தெரிந்தது அதான் ஒத்துக்கிட்டேன் என சொல்கிறாள்.

அடுத்து உமா அமுதாவிடம் நக்கலாக கண்ணனுக்கு என்ன குடுத்து தாலியை வாங்குன என கேக்க, அமுதா கன்னத்தில் அறைந்து இது தான் குடுத்தேன் என்று சொல்கிறாள். மேலும் அண்ணன் வந்து தாலியை கொடுத்ததை சொல்கிறாள். மேலும் அமுதா உமாவிடம் இது நாள் வரைக்கும் உன்னை தங்கச்சியா நினைச்சி பொறுத்து போறேன், நீ எல்லை மீறிகிட்டிருக்க என எச்சரிக்க, உமா அமுதாவிடம் உன்னை நான் நிம்மதியாவே இருக்க விட மாட்டேன் என சொல்ல அமுதா உமாவிடம் இனிமேலும் என்னை சீண்டுன நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறாள்‌.

Also read... மிஷ்கின் முதல் கௌதம் கார்த்தி வரை பிரபலங்கள் சூழ நடைபெற்ற ஆர்.கே.சுரேஷ் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி!

அதன் தொடர்ச்சியாக வீட்டின் வெளியே வடிவேலு உமா, பழனியிடம் அமுதா தாலி கோர்க்கும் பங்ஷனில் தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும், அவ ஊர் முன்னால அசிங்கப்படுவா என தங்க செயினுக்கு பதிலாக தங்க முலாம் பூசிய வெள்ளி செயினை வைத்திருப்பதாக வடிவேலு சொல்ல உமா சந்தோஷம் அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv