ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் பொய் சொன்ன செந்தில்.. வீட்டை விட்டு கிளம்பும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

மீண்டும் பொய் சொன்ன செந்தில்.. வீட்டை விட்டு கிளம்பும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

மீண்டும் பொய் சொன்ன செந்தில், வீட்டை விட்டு கிளம்பும் அமுதா அடுத்து நடக்க போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். அமுதா மற்றும் சுமதி இடையே சண்டை உருவாகி இருந்த நிலையில் செல்வா அன்னலட்சுமி வீட்டிற்கு வந்த நிலையில் இன்றைய எபிசோடில் செல்வா சுமதியின் கன்னத்தில் அறைகிறான்.

மேலும் செல்வா சுமதியிடம் உன் புருஷன் லட்சணம் தெரிஞ்சு தான அவனை கல்யாணம் கட்டிகிட்ட, ஒழுங்கா அமுதா சொல்ற வேலையை செய் என சொல்ல சுமதி வெறுப்பாகிறாள்.

இந்த பிரச்சனைக்கு பிறகு வீட்டை அடகு வைத்த பணத்தில் ஒரு தங்க செயினும் ஒரு கவரிங் செயினும் வாங்கும் வடிவேலு அதை அன்னத்திடம் கொடுத்து யாருக்கும் தெரியாமல் செயினை வச்சுக்கோ என சொல்கிறான்.

பின்னர் செந்தில் குரூப் ஸ்டடி என பொய் சொல்லிவிட்டு ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். அப்போது அமுதா செந்தில் மறைத்து வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவை பார்த்து விட்டு மாணிக்கத்திடம் இன்னும் இவுக பொய் சொல்றதை விடவே இல்லையா, ஏன் இப்படி தொடர்ந்து பொய்யா சொல்றாக என வருந்தப்படுகிறாள்.

Also read... ’லத்தி’ பட டிக்கெட் வருவாயில் மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவி- விஷால்

மேலும் செந்தில் காலேஜ்க்கு வந்ததும் அமுதா பெட்டியில் துணிகளை எடுத்து வைத்து கொண்டு வீட்டை விட்டு போவதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv