ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சுமதி வீட்டுக்குள் நுழைந்ததும் வந்த சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

சுமதி வீட்டுக்குள் நுழைந்ததும் வந்த சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

சுமதிக்கு எதிரியான அமுதா, வீட்டுக்குள் நுழைந்ததும் வந்த சிக்கல், நடந்தது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் புவனா கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லாமல் மறைத்ததால் கோபப்பட அமுதா நடந்த அனைத்தையும் சொல்கிறாள்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் செல்வா பொண்ணை 5 மணிக்குள்ள கொண்டு போய் சேர்க்கலேன்னா புவனாவை கொன்னுருப்பான், அது மட்டுமில்ல வடிவேலுவையும் கொல்ல பிளான் செய்திருந்தான் என சொல்கிறாள்.

அடுத்து அமுதா அன்னலட்சுமியிடம் அதனால தான் நான் சுமதியை அவங்க அப்பா வீட்டுல கொண்டு போய் விட்டேன்.. என்னைக்கா இருந்தாலும் சுமதி நம்ம வீட்டு பொண்ணு அவளை விட்டு குடுக்க மாட்டேன். செல்வாவின் கோபம் தணியட்டும் அவருக்கு எடுத்து சொல்லி சுமதியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரலாம் என சொல்கிறாள்.

அடுத்ததாக வடிவேலு தண்ணியடித்து வந்து அமுதாவிடம் நீ மட்டும் உங்க அப்பனை விட்டுட்டு இங்க வந்து கிடக்குற, நான் கட்டுன பொண்ணு மட்டும் அவ அப்ப வீட்டுல இருக்கனுமா இது என்ன நியாயம் என கலாட்டா செய்கிறான். மறுநாள் காலையில் சின்னா, பரமு பதறி போய் ஓடி வர செல்வா மகள் சீரியஸ் என சொல்ல, அனைவரும் கிளம்பி தலைமறைவாகின்றனர்.

Also read... மூவரின் ஏமாற்றத்தில் உருவான எம்ஜிஆரின் ஒரு தாய் மக்கள்!

அன்னலட்சுமி குடும்பத்தை தேடிய ஆட்கள் செல்வாவிடம் அவனது ஆட்கள் வடிவேலு வீட்டில் அனைவரும் எஸ்கேப் என சொல்ல, அவன் அவ்வளவு பேரையும் தேடிப் பிடிச்சி இங்க கொண்டு வாங்கடா எனும் போது அமுதா வருகிறாள்.

உள்ளே வந்த அமுதா சுமதிக்காக பேசுகிறாள். அடுத்து சுமதிக்கு சிகிச்சை அளித்த பின்னர் வடிவேலு, சுமதி வீட்டுக்கு வருகின்றனர். அடுத்து அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க சுமதி அமுதாவிடம் உனக்கு இருக்கு என மிரட்டல் தோணியில் பேசுகிறாள்.

பிறகு அறைக்குள் நுழைய முயலும் அமுதாவை சுமதி வெளியே போகச் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv