முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செல்வா மகளின் கழுத்தில் தாலி கட்டிய வடிவேலு, அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செல்வா மகளின் கழுத்தில் தாலி கட்டிய வடிவேலு, அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

செல்வா மகளின் கழுத்தில் தாலி கட்டிய வடிவேலு, அமுதா எடுத்த முடிவு, கோபத்தில் செந்தில் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில், புவனாவை கடத்திய செல்வா தனது மகளை தன்னிடம் ஒப்படைத்தால் தான் புவனாவை விடுவிப்பேன் என கூறியிருந்த நிலையில் அமுதாவுக்கு வடிவேல் பரமு சின்னா மீது சந்தேகம் வந்தது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அமுதாவுக்கு வடிவேலு, செல்வா மகளுடன் திருமணம் செய்து கொள்ளப் போவது தெரிய வர மாணிக்கத்துடன் கோயிலுக்கு வருகிறார். இருவரும் கோயிலுக்கு வருவதற்கு முன்னால் வடிவேலு செல்வா மகளின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்.

இதனால் அமுதா வடிவேலுவிடம் சண்டையிடுகிறாள். புவனாவை பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறாள்‌. அந்த பெண்ணை கொண்டு போய் விட்டா தான் புவனாவை காப்பாத்த முடியும் என சொல்ல வடிவேலு முடியாது என சொல்கிறான். இதனை தொடர்ந்து அமுதா சுமதியை இழுத்து ஆட்டோவில் ஏற்ற.

மாணிக்கம், அமுதா மற்றும் சுமதி என மூவரும் ஆட்டோவில் செல்கின்றனர். மறுபக்கம் குமரேசன், பழனி இருவருக்கும் வடிவேல் தாலி கட்டிய விவரம் தெரிய வர சிதம்பரத்துக்கு போன் செய்து செல்வாவின் மகளை வடிவேலு கல்யாணம் செய்து கொண்டான், இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என சிதம்பரத்தை பயமுறுத்துகின்றனர்.

சிதம்பரம் செல்வாவை சந்தித்து தனக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்லிக் கொண்டிருக்க, அமுதா சுமதியை அழைத்து வருகிறாள். அமுதா சுமதியிடம் வடிவேலு ஒரு தப்பான ஆளு, நீ உங்க அப்பா கூட இருக்குறது தான் நல்லது என சொல்கிறாள். சிதம்பரம் அமுதாவிடம் அந்த பெண்ணுக்கு ஊர் நியாயம் எல்லாம் சொல்ற, அது உனக்கு உங்க அப்புச்சிக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியாதா என கேட்கிறார்.

பின்னர் அமுதா செல்வாவிடம் நான் சொன்னபடி உங்க பெண்ணை கொண்டு வந்து ஒப்படைச்சிட்டேன், புவனாவை விடுங்க என சொல்ல, செல்வா புவனாவை விடுவிக்க அமுதா அழைத்து செல்கிறாள்.

Also read... 15 வருடங்களை நிறைவு செய்யும் அஜித்தின் பில்லா

அடுத்ததாக சிதம்பரத்திடம் செல்வா அமுதாவை பற்றி பெருமையாக பேசுகிறார். காலேஜிலிருந்து வீடு திரும்பும் செந்தில் அமுதாவிடமும் அன்னலட்சுமியிடமும் இவ்வளவு நடந்திருக்கு என் கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணலயா, என்னை ஒரு சொம்பையாக நினைக்கிறீங்கல்ல என கோபம் கொள்ள அமுதா நடந்தவற்றை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv