ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

HOD சொன்ன உண்மை, அமுதா காலில் விழுந்த செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

HOD சொன்ன உண்மை, அமுதா காலில் விழுந்த செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

HOD சொன்ன உண்மை, அமுதா காலில் விழுந்த செந்தில், நடந்தது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் HOD செந்திலிடம் பேப்பரை காட்டி என்னை எங்க அம்மா வயல் வேலை பார்த்து தான் என்னை படிக்க வச்சாங்க.. எனக்கு அது எவ்வளவு பெரிய கஷ்டம்னு புரியும். படிக்க வைக்க தங்கச்சிக்காக கஷ்டப்பட்ட அண்ணனை பார்த்திருக்கேன், பையனுக்காக கஷ்டப்படுற அப்பா, அம்மாவை பார்த்திருக்கேன்.. இப்பதான் புருஷனை படிக்க வைக்கிறதுக்காக கஷ்டப்படுற பொண்டாட்டியை பார்க்குறேன்.. உன் பொண்டாட்டிக்காக தான் உன்னை பாஸ் பண்ணி விட்டேன்,. உனக்கு வாழ்க்கைல இன்னொரு சான்ஸ் குடுத்தது நான் கிடையாது.. உன் பொண்டாட்டி தான் உனக்கு இன்னொரு சான்ஸ் குடுத்திருக்கா, அவளுக்காகவாவது படிச்சி பாஸ் பண்ணு என சொல்கிறார்.

அடுத்து முதல்ல பொண்டாட்டிக்கு போய் நன்றி சொல் என சொல்ல செந்தில் நெகிழ்கிறான். உமா, செந்தில் காலேஜ் சேர்ந்த விஷயம் அறிந்து டென்ஷன் ஆகிறாள். செந்தில் உணர்ச்சிவசப்பட்டு அமுதாவின் அருகில் வந்து நிற்கிறான்.

அமுதா என்ன என கேக்க, அவ கையை பிடித்து உடைந்து அழுதபடி அவள் காலில் விழ அமுதா விலகி சென்று மாணிக்கத்திடம் ஏன் சித்தப்பா இப்படி பண்றாரு , அவரை அழ வேண்டாம்னு சொல்லுங்க சித்தப்பா என சொல்கிறாள்.

Also read... புதுப்படங்களை ஓரம் கட்டும் பாபா.. சூடு பிடிக்கும் ரீ ரிலீஸ் வசூல்!

அமுதா தூக்கத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வந்தவள் வீட்டின் பின்னால் லைட் எரிந்து கொண்டிருக்க, அமுதா வந்து பார்க்க வடிவேல், பரமு, சின்னா கல்யாணம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது வடிவேல் பேக்கை தூக்கி கிளம்ப வகுப்பில் செந்தில் அமர்ந்திருக்க, வாத்தியார் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்க, அமுதா அவன் எழுதுகிறானா என பார்க்க செந்தில் ஏதும் எழுதாமல் இருக்க அமுதா மாணிக்கத்திடம் என்ன இவுக எழுத மாட்டாக்குறாக என சொல்ல, அவசரப்படாதம்மா எழுதுவான் என மாணிக்கம் அவளுக்கு ஆறுதல் சொல்ல HOD அதை கவனிக்கிறார். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv