Home /News /entertainment /

மதுரைக்கு போன அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

மதுரைக்கு போன அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

மதுரைக்கு போன அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். அமுதா செந்தில் என இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே பேருந்தில் மதுரைக்கு சென்றுள்ளனர்.

  இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அமுதாவால் தேடி வந்த நபரை சந்திக்க முடியாமல் போகிறது.  அதே பெயரில் வெவ்வேறு செக்‌ஷனில் நால்வர் இருக்க யாரை பார்ப்பது என தெரியாத நிலையில் ஒவ்வொரு செக்‌ஷனாக தன் ஆடிட்டர் பெயர் சொல்லி அவர அழைச்சார் என கேட்டு அலைகிறாள்.

  அமுதாவால் கண்டு பிடிக்கவே முடியாது என வரும் நிலையில் கடைசி ஒரு டேபிளில் வந்து விசாரிக்க அவர் சாப்பிட போய் இருக்கார் என சொல்லி வெயிட் பண்ண சொல்கின்றனர்.

  அமுதாவுக்கும் பசி ஆனால் சாப்பிட போனால் தேடி வந்த நபரை மிஸ் பண்ணி விடுவோமோ என பயந்து அங்கேயே காத்து இருக்க ரொம்ப நேரம் கழிச்சு அந்த நபர் வருகிறார். அதை தன் சீப் ஆபீசர் தான் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என சொல்லி நாளை வாம்மா என்பது அமுதா மறுநாள் எல்லாம் வர முடியாது என சொல்ல அவர் வேறு வழி இல்ல நாளைக்கு வா முடிச்சு கொடுக்கலாம் என சொல்ல, அமுதா பயங்கர சோர்வுடன் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்கிறாள். அவள் மனசில் நாகு செய்த கிண்டல் நினைவுக்கு வர எப்படியாவது கல்யாணத்தை தடை இல்லாமல் செய்ய வேண்டும் என நினைக்கிறாள்.

  இந்த பக்கம் உமா அவள் அறையில் மௌனமாக படுத்திருக்க, அப்போது போன் அடிக்க அவள் போய் அட்டெண்ட் பண்ண லவ்வர் உமாவிடம் எமோஷனாக பேசுகிறான். கடைசியாக ஒரு தடவை என்னை பார்க்க வேண்டும் என கேக்க உமா தயங்க அவன் ரொம்ப கெஞ்ச ஒரு கட்டத்தில் உமா சரி என ஒப்பு கொள்கிறாள். லவ்வர் போனை வைக்க, அவன் அருகில் பழனி இருக்கிறான். பழனி அவனிடம் என்ன சொன்னா என கேக்க, அவள் வர்றேன்னு சொன்னா என சொல்ல, பழனி முகம் மாறுகிறது.

  மறுநாள் அமுதா மீண்டும் ஆடிட்டர் சொன்ன நபரை பார்க்க போக அவர் தன் சீப் ஆபீசர் இன்றும் லீவு நான் அவங்க அட்ரஸ் தர்றேன் நான் சொன்னேன்னு சொல்லாமல் நீ போய் பாரு அவங்கட்ட பேசி பாருங்க அவங்க மனசு வச்சா மட்டுந்தான் இது நடக்கும் என கூறுகிறார். அட்ரஸ் வாங்கி கொண்டு அமுதா ஒரு ஆட்டோ பிடிக்க ஓடி அலையும்  போது வழியில் தென்பட்ட பிள்ளையாரை பார்த்து வேண்டிக் கொள்கிறார்.

  Also read... மாரியை திட்டிய சூர்யாவுக்கு காத்திருந்த ஷாக் - மாரி சீரியல் அப்டேட்!

  ஆபீசரால் அமுதா இங்க எல்லாம் வந்து பார்க்க கூடாது என துரத்த அந்த நேரத்தில் படுத்த படுக்கையாக இருக்கும் ஆபிசரின் அம்மாவின் தீடிரென உடல் நிலை சிக்கலாக அமுதா தனக்கு தெரிஞ்ச கை வைத்தியம் போல் ஏதோ ஒன்றை செய்து ஆபீசரின் பதட்டம் பயம் குறைத்து விட்டு புறப்பட ஆபீசர் அவள் கேட்ட உதவி குறித்து மீண்டும் எதுவும் கேக்காம போற என கேட்க, அமுதா நான் முதல்ல கேட்டது உதவி, இப்ப செஞ்சது ஒரு மனிதாபிமானம் அதுக்கு பதில் உதவி கேக்குறது நியாயம் இல்லை என சொல்கிறாள்.

  அமுதா செய்த உதவியால் ஆபிசர் அவளுக்கு உதவுவாரா? உமா பற்றி தெரிந்த பழனியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv

  அடுத்த செய்தி