Home /News /entertainment /

அமுதாவுக்கு கெடுவைத்த காண்ட்ராக்டர், புது பிரச்சனையில் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவுக்கு கெடுவைத்த காண்ட்ராக்டர், புது பிரச்சனையில் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவுக்கு கெடுவைத்த காண்ட்ராக்டர், புது பிரச்சனையில் செந்தில்,அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில்இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். உமாவின் பழைய காதலன் விஷம் அருந்தி விட்டதாக அவளுக்கு போன் வரேன் பதறிப் போய் அவள் மருத்துவமனைக்கு ஓடினாள்.

  இன்றைய எபிசோடில் உமா ஹாஸ்பிடல் வர நண்பர்கள் எல்லோரும் அவளை திட்ட உமா தான் காரணமில்லை என சொல்ல, ஒரு முறையாவது அவனை பார்த்து விட்டு போக சொல்லி நண்பர்கள் வற்புறுத்துகின்றனர்.

  உமா உள்ளே போக பழனி வந்து என்ன மேட்டர் என கேட்க லவ் மேட்டர் என சொல்ல, பழனி உள்ளே போக முற்பட, நண்பர்கள் அவன் லவ்வர் உள்ளே போயிருக்கா என சொல்ல அது உமா தான் என தெரியாமல் வெளியே காத்திருக்கிறான்.

  இந்தப் பக்கம் அமுதா வீட்டில் நாகு இளங்கோ முகத்தை பார்த்தவள் என்ன எமோஷன் பொங்குது ஏதாவது பிரச்சனையா , உங்க மூஞ்சிய ஏன் தொங்க போடனும், காரைக்குடி சிவம் தியேட்டர்ல படத்துக்கு டிக்கெட் வாங்கிருக்கேன் என சொல்லி அவனை அழைக்கிறாள். அடுத்து நாகு அமுதாவிடம் கொஞ்ச நேரத்துல சமையல் காண்ட்ராக்டர் வருவாரே என்ன பண்ண போறே என கேட்க அமுதா நான் பார்த்து சரி பண்றேன் என பீலுடன் பேசுகிறாள்.

  இளங்கோ பார்க்க நாகு அவனை இழுத்துக் கொண்டு செல்கிறாள். பிறகு உமா அறையிலிருந்து வெளியே வர, எதிரே பழனி நிற்க பழனி பார்த்து விடுவானோ என்கிற பயத்துடன் உமா இருக்க அந்த நேரத்தில் பழனிக்கு போன் வர அவன் நகர, உமா அங்கு வருகிறாள்.

  Also read... கம்ப்ளைன்ட் கொடுக்கப் போன இடத்தில் தவறாக பேசிய இன்ஸ்பெக்டர் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

  உமா நண்பர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப பழனி போன் பேசி விட்டு திரும்பும் போது உமாவை பார்த்து விடுகிறான். இதனால் பழனி பயங்கர டென்ஷன் ஆகிறான். பிறகு பழனி விவரம் கேக்க, உமா தான் தங்களது நண்பனின் லவ்வர் என சொல்ல நண்பர்கள் அவளை அழைக்க போக பழனி வேண்டாம் என சொல்லிவிட்டு யோசிக்கிறார்.

  பணத்தைக் கேட்டு செந்திலை தொந்தரவு செய்த பிளாக் மெயில் வாத்தியார்  டென்ஷன் ஆகி விட ஒ அந்தளவுக்கு தைரியம் வந்துடுச்சா சரி இனி நான் யாருன்னு உனக்கு காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு என சொல்லி விட்டு செந்தில் கெஞ்ச் கெஞ்ச கேக்காமல் சட்டென கோபமாக அங்கிருந்து கிளம்புகிறான்.

  அடுத்ததாக அமுதா வீட்டுக்கு சமையல் காண்ட்ராக்டர் வர அமுதா அவரிடம் தயக்கமாய் பணத்துக்கு டைம் கேக்க நினைச்சு தடுமாறி கொண்டு காபி ,டீ என்ன சாப்பிடுறீங்க ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க என உபசரித்து விட்டு அவள் வச்சு இருந்த சேமிப்பு பணம் எல்லாம் சேர்த்து ஒரு 5001 என்றளவில் தந்து மீதி பணம் தர டைம் கேக்க அவர் மறுக்கிறார். உங்க அண்ணன் மாமியார் எப்ப வேணா கல்யாணம் நிக்கும்னு சொல்லிட்டு இருக்காங்க எனக்கு வேற இடத்துல் பாக்கு வாங்கிக்க சொல்லி கெஞ்சிட்டு இருக்காங்க என சொல்லி ரெண்டு நாள் டைம் தர்றேன் அட்வான்ஸ் ரெடி பண்ணும்மா இல்ல வெளியூர் வேலை ஒன்னு வருது நான் அதை ஏத்துப்பேன் அப்பறம் நீ வேற ஆளு தான் பார்த்துக்கணும் என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப அமுதா அதிர்ச்சியாகி நிற்கிறார்.

  பிறகு ப்ளாக் மெயிலர் வாத்தியார் அன்னம் வீட்டிற்கு வந்து நிற்க அவனின் நோக்கம் தெரியாமல் அன்னம் அவனை வீட்டிலொருவன் என்பது போல் பேசுகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன? அமுதா என்ன செய்யப் போகிறாள்? சிக்கிக் கொள்வானா செந்தில்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv

  அடுத்த செய்தி