ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுதாவிடம் 15 லட்சம் பணத்தை திருட நடக்கும் சதி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவிடம் 15 லட்சம் பணத்தை திருட நடக்கும் சதி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதா இதுவரைக்கும் நான் பேங்கிற்கு சென்றதில்லை. எனக்கு எதுவும் தெரியாது என சொல்ல ஆட்டோகாரர் ஏறும்மா நான் உன்னை கூட்டிட்டு போறேன் என சொல்லி அழைத்து செல்கிறான்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அமுதாவிடம் 15 லட்சம் பணத்தை திருட நடக்கும் சதி, கடைசியில் சிதம்பரம் கொடுத்த அதிர்ச்சி அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். நாகு சவால் விட்டதால் பேங்க்கு சென்று பணத்தோடு வரணும், நீதான் என்னை காப்பாற்ற வேண்டும் என அம்மா முன்னாடி நின்று வேண்டினாள் அமுதா.

  இதனையடுத்து இன்றைய எபிசோட்டில் அமுதா வெளியே வந்து ஆட்டோ பிடித்து  ஆட்டோகாரரிடம் பேங்க் போக சொல்ல ஆட்டோகாரர் எந்த பேங்க் என கேக்க, அமுதா என்ன சொல்வதென்று தெரியாமல் 15 லட்ச ரூபாய் செக்கை அவரிடம் நீட்ட ஆட்டோகாரர் அதைப் பார்த்து பணத்தை திருடி விடலாம் என திட்டம் போடுகிறான்.

  அமுதா இதுவரைக்கும் நான் பேங்கிற்கு சென்றதில்லை. எனக்கு எதுவும் தெரியாது என சொல்ல ஆட்டோகாரர் ஏறும்மா நான் உன்னை கூட்டிட்டு போறேன் என சொல்லி அழைத்து செல்கிறான். பிறகு பேங்க் வாசலில் அமுதாவை டிராப் செய்தவன் நீ போயிட்டு வாம்மா நானே உன்னை திருப்பி கூட்டிட்டு போயிடுறேன் என சொல்ல அமுதா சரி என உள்ளே சென்றதும் ஆட்டோகாரர் யாரிடமோ போனில் பேசி பணம் திருடும் பிளானை போடுகிறான்.

  முதன்முறையாக பேங்க் வந்த அமுதாவுக்கு எதுவும் தெரியாததால் செக்கை கொண்டு வந்து கவுண்டரில் தந்து எங்கப்பா பணம் வாங்கிட்டு வர சொன்னாங்க என சொல்ல அவள் நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மாதிரியாக இருப்பதை கவனித்த கேஷியர் அவள் யாருடைய செக்கையோ திருடி கொண்டு வந்து விவரம் தெரியாமல் முழிக்குறாள் என்ற முடிவுக்கு வர சிதம்பரம் யார் பேரும் குறிப்பிடாமல் அமவுண்ட் மட்டும் போட்டு தந்து இருக்க பேங்க் ஸ்டாப் நீ யாரு இந்த செக் தந்தது யாரு என கேட்க

  அமுதா என் அப்பா தான் என கூறுகிறாள். யாரு பேருக்கு தந்தாங்க என கேட்க அமுதா முழிக்க பேங்க் ஆபீஸர் சிதம்பரத்திற்கு போனை போட போக, அமுதா அதை தடுத்து எங்க அண்ணனுக்கு போன் பண்ணி கேளுங்க என சொல்ல பேங்க் ஆபிசர் இளங்கோவுக்கு போன் அடிக்க இளங்கோ குளித்துக் கொண்டிருக்க, நாகு போனை பார்க்க பேங்க் நம்பரை பார்த்ததும் வேண்டுமென்றே அட்டெண்ட் பண்ணாமல் இளங்கோவிடம் ஏதோ காரணம் சொல்லி சமாளிக்கிறாள்.

  பேங்க் ஆபிசர் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம் என முடிவு செய்ய ஒரு அம்மா அமுதாவுக்கு உதவி செய்ய முடிவில் அந்த பெண் அமுதாவின் அம்மா பெயராக இருக்க அமுதா அம்மாவே தனக்கு உதவி செய்ததாக எண்ணி மகிழ்கிறாள்.

  Also read... துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கவுதம் மேனன் வெளியிட்ட அப்டேட்!

  அமுதாவுக்கு மனசுக்குள் இன்னைக்கு பணத்தை வாங்கிட்டு நாம் போக போறோம் என்ற சந்தோஷம் வர கடைசியில் கேஷியர் அக்கவுண்ட் லாக் பண்ணப்பட்ட விஷயத்தை சொல்ல அமுதா புரியாமல் பார்க்கிறாள். பிறகு வீட்டுக்கு வந்த அமுதா பேங்க் விபரம் சொல்ல –இளங்கோ டென்ஷனாகி ஆடிட்டருக்கு போன் போட அவர் நம்பர் ஸ்விட்ச் ஆப் என வருகிறது. இளங்கோ விவரத்தை அப்பாவிடம் கூற போக அமுதா அதை தடுக்கிறாள். இந்த நேரத்தில் மேலே இருந்து அப்பாவின் குரல் வர, இருவரும் மேலே செல்ல அப்பா பணம் பற்றி இளங்கோவிடம் கேட்க அவன் பணம் இருப்பதாக சொல்ல அமுதா,நாகு என இருவரும் ஷாக்காகின்றனர்.

  உடனே சிதம்பரம் போனை எடுத்து காண்ட்ராக்டரிடம் பணம் ரெடியாக இருப்பதாகவும் வந்து வாங்கிக் கொள்ளுமாறு சொல்ல இளங்கோ அதிர்ச்சி அடைகிறான். அடுத்து நடக்கப் போவது என்ன? சிதம்பரத்திடம் இளங்கோ உண்மையை சொல்லி விடுவானா? பணத்துக்காக அமுதா என்ன செய்யப் போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv