Home /News /entertainment /

உண்மைகளை சொல்ல அமுதா வீட்டுக்கு வரும் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

உண்மைகளை சொல்ல அமுதா வீட்டுக்கு வரும் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதா வீட்டுக்கு சென்று வந்த போது ஏற்பட்ட பல பிரச்சனைகளால் செந்தில் உண்மையைச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என முடிவு செய்து அமுதாவின் வீட்டிற்கு செல்கிறான்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    உண்மைகளை சொல்ல அமுதா வீட்டுக்கு வரும் செந்திலுக்கு காத்திருந்த அதிர்ச்சி அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  அமுதா வீட்டுக்கு சென்று வந்த போது ஏற்பட்ட பல பிரச்சனைகளால் செந்தில் உண்மையைச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என முடிவு செய்து அமுதாவின் வீட்டிற்கு செல்கிறான்.

    வீட்டுக்கு வந்ததும் அங்கு நாகு தனது புடவையை அமுதா கிழித்து விட்டதாக சொல்லி அமுதாவை அவமானப்படுத்துகிறாள். செந்தில் அதை பார்த்த்து விட்டு உண்மையை சொல்லாமல் திரும்பி விடுகிறான்.

    அதன் பின்னர் செந்தில் அமுதாவின் தம்பி செந்திலை அழைத்து தொடர்ந்து பிரச்சனைகள் வருவதால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என சொல்ல செல்வா அமுதா வீட்டில் கஷ்டப்படுவதை சொல்கிறான். அமுதா அக்கா உங்களை கல்யாணம் செய்து கொண்டால் அவளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படும் என சொல்கிறான். அதுமட்டுமில்லாமல் இந்த கல்யாணம் நடப்பதற்காக அமுதா தினமும் கோவிலில் படும் கஷ்டத்தை நேரில் பார்க்குமாறு சொல்கிறான்.

    இதனால் செந்தில் மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வர கோவிலில் அமுதா கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக முட்டி போட்டு உப்பின் மீது நடக்க அவளது முட்டியில் ரத்தம் வருகிறது. அதைப் பார்த்ததும் செந்தில் மாமாவிடம் வருந்தி அம்மாவுக்காக வாத்தியார் என பொய் சொன்னேன், இனி அமுதாவுக்காக அந்த பொய்யை தொடரப் போவதாக சொல்கிறான். அமுதாவை போல அவனும் முட்டி போட்டு பிரார்த்தனை செய்கிறான்.

    Also read... சூர்யாவை காப்பாற்ற சென்னைக்கு கிளம்பும் மாரி - மாரி சீரியல் அப்டேட்!

    பின்னர் வீட்டில் அமுதா சாப்பாடு ரெடி பண்ணி கொண்டிருக்க பாப்பா யாருக்கு சாப்பாடு என கேட்க அமுதா செந்திலுக்கு தான் என சொல்லுகிறாள். நாகுவின் மாமியாரும் சாப்பாடு யாருக்கு என கேட்க அமுதா வாத்தியாருக்கு தான் என சொல்ல கடுப்பான கோமதி நாகுவிடம் சென்று இது தான் நல்ல சான்ஸ் அமுதாவுடன் ஸ்கூலுக்கு சென்று செந்தில் வாத்தியார் வேலை தான் பார்க்கிறானா என செக் செய்து விட்டு வரச் சொல்லுகிறாள். அமுதா கிளம்பிக் கொண்டிருக்க, நாகு அவளுடன் தானும் வருவதாக சொல்கிறாள். ஸ்கூலில் கரஸ்பாண்டிடம் செந்தில் கல்யாணத்திற்காக கடன் கேட்க, அவர் நீ பார்ப்பதோ டெம்பரரி வேலை அதற்கு கடன் கிடைக்காது என சொல்லி விட்டு காரை கழுவுமாறு சொல்கிறார்.

    செந்தில் காரை கழுவிக் கொண்டிருக்க, அமுதாவும் தாக்குவதும் ஆட்டோவில் ஸ்கூலுக்கு வருகின்றனர். செந்தில் காரை கழுவதை அமுதா பார்த்தால் என்ன நடக்கும்? நாகுவின் திட்டத்தின் படி செந்தில் பியூனாக வேலை செய்வது அமுதாவுக்கு தெரிய வருமா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி