Home /News /entertainment /

செந்திலுக்கு காத்திருக்கும் சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செந்திலுக்கு காத்திருக்கும் சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவின் அப்பா எல்லார் முன்னிலையில் உங்க குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் நிறைய பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. பார்த்து நடந்துக்கோங்க இல்லனா கல்யாணத்தைப் பற்றி நான் யோசிக்க வேண்டியது வரும் என எச்சரிக்கிறார்.

  • News18
  • Last Updated :
    அன்னலட்சுமி குடும்பத்தை அப்பாவு எச்சரிக்க செந்திலுக்கு சிக்கல் ஒன்று காத்திருக்கிறது அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் தான் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் செந்திலும் அமுதாவும் போனில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அமுதாவின் அண்ணி ஃபோனை பிடுங்கி இப்படி ரொம்ப நேரம் போன் பேசிக்கிட்டு இருக்காதீங்க. நிச்சயம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு இன்னும் கல்யாணம் நடக்கல அதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம் என எச்சரிக்கிறார்.



    அதன் பிறகு வடிவேலு அமுதா வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்த காரணத்தினால் அன்னலட்சுமி தன்னுடைய தம்பியுடன் மன்னிப்பு கேட்க அமுதா வீட்டிற்கு வருகிறார்.

    அமுதாவின் அப்பா எல்லார் முன்னிலையில் உங்க குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் நிறைய பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. பார்த்து நடந்துக்கோங்க இல்லனா கல்யாணத்தைப் பற்றி நான் யோசிக்க வேண்டியது வரும் என எச்சரிக்கிறார். அன்னலட்சுமி மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் அமுதாவின் அண்ணி செந்திலை சும்மா சும்மா போன் பண்ணி பேச வேண்டாம், வெளியில் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டாம் என சொல்லுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் நடந்துக்கிறது சரியாக தெரியல என கூறுகிறார். அன்னலட்சுமி சரி என சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

    Also read... விருமன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் இயக்குநர் ஷங்கர்

    இரண்டு குடும்பத்திற்கும் இப்படி மாறி மாறி பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதால் செந்திலும் அமுதாவும் ஒரு இடத்தில் சந்தித்து இந்த கல்யாணம் எப்படியாவது நடந்தே ஆக வேண்டும் என பேசிக்கொள்கின்றனர். இந்த கல்யாணம் மட்டும் நடக்கவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என அமுதா சொல்கிறாள். செந்தில் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும் என வாக்குறுதி கொடுக்கிறார்.

    அதன் பிறகு மறுநாள் காலையில் ஆரம்பத்தில் செந்தில் காப்பாற்றிய பெண் செந்தில் வேலை செய்யும் ஸ்கூலுக்கு கேம்பிற்காக செல்கிறாள். இந்த விஷயம் அறிந்த அமுதா செந்தில் வாத்தியார் வேலை செய்வதை நான் பார்க்க வேண்டும். எனக்காக அதை வீடியோ எடுத்து அனுப்பு என அந்த பெண்ணிடம் மொபைல் போனை கொடுத்து அனுப்புகிறாள். இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial Promos, Zee Tamil Tv

    அடுத்த செய்தி