ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ்... இன்று முதல் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல்!

மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ்... இன்று முதல் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

செம்பருத்தி சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கும் கார்த்திகை தீபம் என்ற புதிய சீரியல் இன்று முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் கார்த்திக் ராஜ். சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது இவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கார்த்திகை தீபம் என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்க தீபா என்ற நாயகி கதாபாத்திரத்தில் ஹர்த்திகா என்பவர் நடிக்கிறார்.

கருப்பு நிற பெண்ணான தீபாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அழகாக பாடும் திறமை இருந்தாலும் தன்னுடைய நிறத்தால் தீபா தொடர்ந்து சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டு வருகிறார். திடீரென எதிர்பாராத சூழ்நிலையில் இவர் மிகப்பெரிய நிறுவனத்தின் CEO கார்த்திக்கை திருமணம் செய்ய அதன் பிறகு அவளது வாழ்க்கை என்னவாகிறது? கருப்பை பிடிக்காத கார்த்தியின் மனதை வெல்வாளா? அவளது வாழ்க்கையின் கனவு நனவாகுமா? என்பதுதான் சீரியல் கதைக்களம் என தெரிய வந்துள்ளது.

படு விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் அபிராமி ஆக மீரா கிருஷ்ணன் நடிக்கிறார். மிகப்பெரிய பாடகி என ராஜஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் நடிகை விசித்ரா நடிக்கிறார். மேலும் பிரபல நடிகரான ராஜேஷ் கதாநாயகிக்கு அப்பாவாக இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அய்யனார் கோயில் கிராமத்து அய்யனார் கோயில் குறி சொல்றவர் வந்து குறி சொல்றபடி சாமி ஆடுகிறார். கோயில்ல வந்து ஹீரோயின் தீபாவோட அம்மா அப்பா அண்ணா அண்ணி எல்லாரும் சேர்ந்து வந்து ஒரு சின்ன வேண்டுதல் பண்றாங்க, அதாவது கோவிலுக்கு வரவங்க கால கழுவுறாங்க.. என்ன விஷயம் கேட்கும்போது இது மாதிரி என் பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும், அதுக்காக நான் பாத பூஜை பண்றோம் என்று காலை கழுவ அவர்கள் வந்து உன் பொண்ணுக்கு நல்ல இடத்துல கல்யாணம் நடக்கும் என்று வாழ்த்திட்டு போகின்றனர்.

அப்போது தீபா ஃபேமிலி அய்யனாரிடம் குறி கேட்க உன் பொண்ணு ராஜகுமாரி என்று சொல்லி தீபா அறிமுகம் செய்ய தீபா ஒரு ஆலமரத்தில் அடியில் குழந்தை அழுக அந்த குழந்தையை எடுத்து பாட்டு பாடி அறிமுகம் ஆகிறார். அடுத்து தீபாவின் அப்பா என் பொண்ணுக்கு வர போற மாப்பிள்ளை பத்தி கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்க ஹீரோ கார்த்திக் அறிமுகம்.

ஒரு பெரிய பியூட்டிஷியன் ப்ராடக்ட் பேஷன் அவார்டுக்கு அவார்ட் வாங்க வந்து இறங்க அடுத்து அய்யனார் குறி சொல்பவர் கார்த்தியோட பேமிலி அறிமுகப்படுத்த கார்த்திக்கின் அம்மா அபிராமி அறிமுகமாகிறார்.

அபிராமி வீட்டில் பூஜை செய்து பின்னர் கிச்சன் சென்று சாப்பாடுகளை டேஸ்ட் பார்த்து மீனாட்சியிடம் இதுல உப்பு இருக்கு அதற்கு சரி செய்ய சொல்வது என்றும் இன்னும் கொஞ்ச நேரத்துல கார்த்திக் வந்துருவான் என்று சொல்கிறார்.

Also read... அனிருத் பாடலை காப்பியடித்துள்ளாரா தமன்? வாரிசு 'தீ தளபதி' பாடலை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

அடுத்து தீபா கோவமாக வீட்டுக்கு வந்து அம்மாவிடம் எதுக்கு எல்லாரும் கால கழுவுன என்று சத்தம் போட இல்ல உனக்கு திருமண நடப்பதற்காக தான் அந்த மாதிரி பண்ணேன் என்று சொல்ல தீபா அது வந்து நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும் நீ எதுக்கு இது மாதிரி எல்லாம் பண்ற என்று சொல்ல அந்த வீட்டுக்கு ராஜஸ்ரீ வந்து கச்சேரிக்கு நேரம் ஆச்சு கிளம்பலாம் என்று சொல்லி அழைத்து போகிறார்.

மேலும் பங்க்ஷனில் கார்த்திக் அவார்ட் வாங்க இதுக்கெல்லாம் காரணம் எங்க அம்மா தான் என்று சொல்லி அம்மாவை பற்றி சொல்ல வீட்டில் டிவியில் அம்மா பார்த்துக் கொண்டு பீல் ஆகிறார். தனக்கு வரப்போற மனைவியும் அம்மா தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்ல அம்மா ஃபீல் ஆக, கோயில் கச்சேரிக்கு தீபா ராஜஸ்ரீ ரூபாஸ்ரீ வர அவர்கள் அனைவரும் வரவேற்று பாட ஆரம்பிக்க தீபா பாட ஆரம்பிக்க அப்போது தான் தெரிகிறது தீபா பாட ரூபஸ்ரீ வாய் அசைக்கிறார்.

அப்போது இந்த பாட்டு சத்தம் கேட்க அந்த வழியா வந்து கொண்டிருந்த கார்த்திக் கோயிலுக்கு வருகிறார். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv